உள்ளடக்கத்துக்குச் செல்

குலாப் புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குலாப் புயல், 26 செப்டம்பர் 2021 அன்று வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு குலாப் எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.[1] வழக்கமாக வங்கக் கடல், அரபிக்கடலில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு அதனை சுற்றியுள்ள 13 நாடுகள் பெயர் சூட்டுவது வழக்கம். அந்தவகையில் தற்போது உருவாகியிருக்கும் இந்த புயலுக்கு பாகிஸ்தான் பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

குலாப் புயல் மேற்கு திசையில் நகர்ந்து, 26 செப்டம்பர் 2021 (ஞாயிற்றுக்கிழமை) மாலை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய விசாகப்பட்டினம்-கோபால்பூர் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து இரு மாநில கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். குலாப் புயலை எதிர்கொள்ள அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய அரசும் உறுதி அளித்திருந்தது

ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்தது குலாப் புயல். பின் இப்புயல் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. குலாப் புயல் கரையை கடந்த நிலையில் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிஷாவில் கனமழை கொட்டியது.

புயல் கரையை கடந்த போது ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் கனமழை கொட்டியது. பின் குலாப் புயலானது வலுவிழந்து[2] ஆழ்ந்த் தாழ்வுநிலையாக வடக்கு ஆந்திரா கடற்பரப்பில் நிலை கொண்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாப்_புயல்&oldid=3289072" இலிருந்து மீள்விக்கப்பட்டது