குலாபி கேங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு குலாபி கேங் உறுப்பினர்

குலாபி கேங் (Gulabi gang) ஒரு இந்தியப் பெண்கள் குழு. இக்குழு இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புண்தில்கண்ட் பகுதியில் உருவானது[1]. தொடர்ந்து வட இந்தியா முழுவதும் இக்குழு செயல்பட்டு வருகிறது.[2] அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் சமுதாய, அதிகார அநீதிகளைத் தட்டிக் கேட்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதன் உறுப்பினர்கள் அனைவரும் பெண்கள். இவர்கள் ரோஜா நிறச் சேலை அணிந்து கையில் ஒரு நீண்ட கழியுடன் பணியில் ஈடுபடுகின்றனர்.

வரலாறு[தொகு]

2006 இல் குலாபி கேங் குழுவினைத் தொடங்கியவர் சம்பத் பால் தேவி. இவர் அரசு சுகாதார பணியாளாராக வேலை பார்த்தவர். சிறுவயதிலேயே திருமணமான இவருக்கு ஏற்பட்ட குடும்ப வன்முறைத் துன்பங்களால் ஒரு காலகட்டத்தில் அவற்றுக்கு எதிராக செயற்படத் தொடங்கினார். தன்னைப் போன்றே குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதற்காக இக்குழுவினைத் தொடங்கினார்.[3]

செயற்பாடுகள்[தொகு]

காசுக்காகாக மனைவியைத் துன்புறுத்தும் குடிகாரக் கணவன், வரதட்சணை கேட்டு துன்புறுத்தும் கணவன், மணமுடிக்காமல் நழுவும் காதலர்கள் போன்ற குடும்பச் சிக்கல்களில் தலையிட்டு தீர்த்து வைக்கிறார்கள்.

அரசு சான்றிதழ்களுக்கு கையூட்டுக் கேட்கும் அதிகாரிகள், அறிவிக்கப்பட்ட அரசு நிவாரண உதவி கிடைப்பதற்கு உள்ள தடைகள், மனுக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க முன்வராத காவல்துறை மீதான புகார்கள் போன்ற சிக்கல்களை குலாபி கேங் பெண்களிடம் முன்வைத்தால் உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

சிக்கல்களைப் பொறுத்து, சுமார் ஐந்து முதல் ஐந்நூறு எண்ணிக்கையிலான பெண்கள் ரோஸ் நிறச் சேலைகள் அணிந்து நீண்ட கம்புகளுடன் செல்கிறார்கள்[4]. மனைவியை கொடுமைப்படுத்தும் கணவர்களை மிரட்டியும் அடித்தும் பணியச் செய்வார்கள்.[1][5] 2008 இல் பாந்தா மாவட்டத்தில் கையூட்டு வாங்கிக் கொண்டு மின்சாரத்தைத் தடை செய்த மின் அலுவலர்களை அவர்களின் அலுவலகத்தைத் தாக்கி மீண்டும் மின்சாரத்தை வழங்கச் செய்தனர்.[6]

’குழந்தைத் திருமணங்களைத் தடுத்தல்’, ’வரதட்சணை வாங்குவதை எதிர்த்தல்’, ’பெண் கல்விக்கு ஆதரவு’ போன்ற செயல்களில் இக் குழு முனைப்பாக செயல்படுகிறது.[2] 2008 ஆண்டில் இக்குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை 20,000 ஆகும். மேலும் இதன் கிளை ஒன்று பிரான்சின் பாரிஸ் நகரிலும் உள்ளது.[1]

திரைப்படங்கள்[தொகு]

குலாபி கேங்கைப் பற்றிய பிங்க் சாரீஸ் திரைப்படம்2010-ஆம் ஆண்டிலும், ஆவணப்படம் ’குலாபி கேங்’ 2012-ஆம் ஆண்டிலும் வெளியானது.[7][8][9]

மாதுரி தீட்சித் மற்றும் ஜூஹி சாவ்லா நடிப்பில் வெளியான ’குலாப் கேங்’ திரைப்படம் இக்குழுவின் தலைவர் சம்பத் பாலின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது என்று முதலில் சொல்லப்பட்டாலும் அதன் இயக்குனரால் அக்கருத்து மறுக்கப்பட்டது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Fontanella-Khan, Amana (19 July 2010). "Wear a Rose Sari and Carry a Big Stick: The women's gangs of India". Slate magazine. http://www.slate.com/articles/double_x/doublex/2010/07/wear_a_pink_sari_and_carry_a_big_stick.html. பார்த்த நாள்: 25 October 2011. 
  2. 2.0 2.1 Krishna, Geetanjali (5 June 2010). "The power of pink". பிசினஸ் ஸ்டாண்டர்ட். http://www.business-standard.com/india/news/geetanjali-krishnapowerpink/397107/. பார்த்த நாள்: 20 July 2010. 
  3. Biswas, Soutik (26 November 2007). "India's 'pink' vigilante women". BBC News. http://news.bbc.co.uk/2/hi/7068875.stm. பார்த்த நாள்: 20 July 2010. 
  4. "உ.பி.யில் 'குலாபி கேங்' உருவானது எப்படி?". தி இந்து. http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article5770685.ece?homepage=true. பார்த்த நாள்: மார்ச் 12, 2014. 
  5. Cochrane, p. 218
  6. Prasad, Raekha (15 February 2008). "Banda sisters". தி கார்டியன். http://www.guardian.co.uk/lifeandstyle/2008/feb/15/women.india. பார்த்த நாள்: 20 July 2010. 
  7. Melissa Silverstein (2010-09-17). "Trailer Alert: Pink Saris | Women & Hollywood". Womenandhollywood.com. Archived from the original on 2013-09-11. பார்க்கப்பட்ட நாள் 2013-03-02.
  8. "Gulabi Gang". Dubai Film Fest. Archived from the original on டிசம்பர் 26, 2013. பார்க்கப்பட்ட நாள் Aug 17, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Gulabu Gang
  10. Singh, Renu (10 March 2013). "Will take 'Gulab Gang' makers to court: Sampat Pal". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Will-take-Gulab-Gang-makers-to-court-Sampat-Pal/articleshow/18880830.cms. 

ஆதார நூல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாபி_கேங்&oldid=3550784" இலிருந்து மீள்விக்கப்பட்டது