குலச் சமஅமைவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுண்புல இயற்கணிதத்தில் குலச் சமஅமைவியம் (group isomorphism) என்பது இரு குலங்களின் உறுப்புகளுக்கிடையில் ஒன்றுக்கு-ஒன்று தொடர்பினை ஏற்படுத்தும் சார்பாகும். இரு குலங்களுக்கிடையே சமஅமைவியம் இருக்குமானால் அவையிரண்டும் சமஅமைவியமுடைய குலங்கள் எனப்படும். சமஅமைவியமுடைய குலங்களின் பண்புகள் ஒரேமாதிரியாக அமைந்திருக்கும்.

வரையறையும் குறியீடும்[தொகு]

(G, *) , (H, ) ஆகிய இரு குலங்களுக்கிடையே குலச் சமஅமைவியமானது G லிருந்து H க்கு வரையறுக்கப்படும் இருவழிக் குலக் காப்பமைவியமாகும்.

வரையறை:

.

குறியீடு: (G, *) , (H, ) இரண்டும் சம அமைவியமுடைய குலங்கள் என்பதைக் குறிக்கும் குறியீடு:

இரு குலங்களின் ஈருறுப்புச் செயலிகளும் நன்கறியப்பட்டவையாக இருப்பின், அவையில்லாமல் இக்குறியீட்டைச் சுருக்கமாக எழுதலாம்:

சிலசமயங்களில் G = H எனவும் குறிக்கப்படலாம். ஆனால் இது எல்லா சூழ்நிலைகளிலும் சரியாக இருக்காது. எடுத்துக்காட்டாக இரு குலங்களும் ஒரே குலத்தின் உட்குலங்களாக இருந்தால் சமஅமைவியத்திற்கு சமக்குறிமட்டும் இடுதல் பொருந்தாது.

மறுதலையாக, குலம் (G, *); கணம் H; இருவழிக்கோப்பு மூன்றும் தரப்பட்டால்,

என வரையறுப்பதன் மூலம் H கணத்தை (H, ) எனும் குலமாக்கலாம்.

H = G , = * எனில் இச்சார்பு தன்னமைவியம் எனப்படும்.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

 • மெய்யெண்களின் கூட்டல் குலம் (,+), நேர் மெய்யெண்களின் பெருக்கல் குலத்துடன் (+,×): சமஅமைவியமுடையது:

சமஅமைவியம்:

சமஅமைவியம்:

 • கிளைன் நான்குறுப்புக்குலம், இன் இரு நகல்களின் நேர்பெருக்கல் குலத்துடன் () சமஅமைவியமுடையது.
 • (G, *) ஒரு முடிவுறா சுழற் குலம் எனில் முழு எண்களின் கூட்டல் குலத்துடன் (G, *) சமஅமைவியம் கொண்டது.
 • மெய்யெண்களின் கூட்டல் குலம் (, +) சிக்கலெண்களின் கூட்டல் குலத்துடன் (, +) சமாமைவியமுடையது.
 • பூச்சியமற்ற சிக்கலெண்களின் பெருக்கல் குலம் (*, ·) தனிமதிப்பு 1 உடையசிக்கலெண்களின் பெருக்கல் குலத்துடன் (, ×) சமஅமைவியமுடையது.

பண்புகள்[தொகு]

 • (G, *) லிருந்து (H, ) க்குள்ள சம அமைவியத்தின் உட்கரு (kernel) எப்பொழுதும் {eG} ஆக இருக்கும். இங்கு eG, (G, *) குலத்தின் முற்றொருமை உறுப்பு.
 • (G, *) , (H,) உடன் சமஅமைவியம் உடையதாக இருக்கும்போது G ஏபெல் குலமாக இருந்தால் H ம் ஏபெல் குலமாக இருக்கும்.
 • (G, *) , (H, ) உடன் சமஅமைவியம் உடையதாக இருக்கும்போது (f), G இன் ஒரு உறுப்பு a இன் வரிசை n எனில், H இல் f(a) இன் வரிசையும் n ஆக இருக்கும்.
 • (G, *) இடஞ்சார்ந்த முடிவுறு குலமெனில் (locally finite group) அதனுடன் சமஅமைவியம் கொண்ட (H, ) ம் இடஞ்சார்ந்த முடிவுறு குலமாக இருக்கும்
 • குலத்தின் பண்புகள் எப்பெழுதும் சம அமைவியத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்பதை மேலே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் மூலம் அறியலாம்.

சுழற் குலங்கள்[தொகு]

தரப்பட்ட கிரமமுள்ள அனைத்து சுழற் குலங்களும் உடன் சமஅமைவியம் கொண்டவை.

நிறுவல்

G , n கிரம குலம் என்க. G ஐப் பின்வரும் பிறப்பிக்கப்பட்ட குலமாகக் கொள்ளலாம்.

.

எனும் சார்பு கீழுள்ளவாறு வரையறுக்கப்படுகிறது:

 :.

இச்சார்பு இருவழிக்கோப்பாக உள்ளது.

எனவே,

.

விளைவுகள்[தொகு]

எனும் சமஅமைவியம், G இன் முற்றொருமை உறுப்புடன் H இன் முற்றொருமை உறுப்பை இணைக்கிறது:

;

அதேபோல் G இல் உள்ள நேர்மாறு உறுப்பை H இல் அதற்கொத்த நேர்மாறு உறுப்புடன் இணைக்கிறது:

பொதுவாக,

மேலும் f இன் நேர்மாறு ம் ஒரு குல சம அமைவியம்.

"சமஅமைவியமானது" என்ற உறவு, ஒரு சமான உறவிற்கான அனைத்து அடிக்கோள்களையும் நிறைவுசெய்கிறது.

என்பது சமஅமைவியம் எனில் G இல் உண்மையாக அமையும் கூற்றுகளில் குல அமைப்புத் தொடர்பானவற்றை மட்டுமே f மூலம் H இல் அமையும் உண்மைக்கூற்றுகளாக மாற்றமுடியும் (அதேபோலத்தான் H லிருந்து G க்கும்).

தன்னமைவியம்[தொகு]

குலம் (G,*) லிருந்து (G,*) க்கே அமையும் சமஅமைவியம், தன்னமைவியம் எனப்படும் இத்தன்னமைவியம் பின்வரும் இருவழிக்கோப்பாகும்:

.

தன்னமைவியமானது குலத்தின் முற்றொருமை உறுப்பை, முற்றொருமை உறுப்பாகவே மாற்றுகிறது; ஒரு இணையியப் பகுதியை அதே இணையியப் பகுதியாகவோ அல்லது வேறொரு இணையியப் பகுதியாகவோ மாற்றுகிறது; தன்னமைவியத்தின் கீழ் ஒரு உறுப்பின் கிரமமும் அதன் எதிருருவின் கிரமமும் சமமாக இருக்கும்.

இரு தன்னமைவியங்களின் சேர்ப்பும் மற்றொரு தன்னமைவியமாக இருக்கும். இச்செயலியின்கீழ் G குலத்தின் அனைத்து தன்னமைவியங்களின் கணம் ஒரு குலமாகும். இக்குலம் G இன் தன்னமைவியக் குலம் என அழைக்கப்படும். மேலும் அதன் குறியீடு: Aut(G).

மேற்கோள்கள்[தொகு]

 • Herstein, I. N., Topics in Algebra, Wiley; 2 edition (June 20, 1975), ISBN 0-471-01090-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலச்_சமஅமைவியம்&oldid=2745913" இலிருந்து மீள்விக்கப்பட்டது