குற்ற ஒப்புதல் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குற்ற ஒப்புதல் பக்கங்கள் (Confession Pages) பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்து வருகின்றன. [1] பெரும்பாலும் கல்வி நிலையங்களில் பயிலும் அல்லது பயின்ற மாணவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் குற்ற ஒப்புதல் புரிய இவை பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் மனத்தைத் திறந்து இவ்வாறு செய்வது ஒரு புறம் வரவேற்கப்பட்டாலும் அவற்றில் உபயோகப்படுத்தும் மொழிநடை மற்றும் தனிநபர் தாக்குதல்களால் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Confessions go viral". The Hindu (2013-04-14). பார்த்த நாள் 2013-10-18.