குற்ற உளவியல்
குற்ற உளவியல் (Criminal psychology; Criminological psychology, [2] ) என்பது, குற்றவாளிகளின் பார்வைகள், எண்ணங்கள், நோக்கங்கள், செயல்கள், எதிர்வினைகள் குறித்தும், அத்துடன் குற்றவியில் நடத்தையில் உட்படும் அனைத்தையும் ஆய்வுகளைச் செய்யும், உளவியில் பிரிவு ஆகும். [3][4] ஒவ்வொருவரும் சமூக ஒற்றுமை, அமைதி, முன்னேற்றம் கருதி அதற்கென உருவாக்கப்பட்ட தனித்தனிச் சட்டங்களைப் பின்பற்ற, சட்டங்கள் இருந்தபோதிலும், மக்கள் தத்தம் உணர்ச்சிகளையும், உரிமைகளையும், கோட்பாடுகளையும், பொதுநலத்துக்காக, விட்டுக்கொடுத்து வாழ்தல் இன்றியமையாததாகிறது. இந்த சமூக நலனுக்கானச் சட்டங்களை மீறி நடப்பது, ‘குற்றம்’ என்று கூறப்படுகிறது. ஆகவே, சமூக அமைப்புக்கு ஒத்து நடக்காதவர்களைச் சட்டமும், சமூகமும் குற்றவாளிகள் என அழைக்கின்றனர். இத்தகையோர் குற்றம் புரிவதற்கு, பல காரணிகள் இருப்பதாக உளவியில் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.[5][6]
காரணிகள்
[தொகு]குற்றவியல் உளவியலாளர்கள் பின்வரும் அடிப்படைக் காரணிகளைக் கண்டறிந்துள்ளனர். 1964 ஆம் ஆண்டு, செருமனியில் பிறந்த, இங்கிலாந்து உளவியலாளரான, குற்றவியில் கோட்பாடுகளை ஒருங்கிணைத்தவருள் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.[8][9][10]
சமூக அறிவுவளர்ச்சிக் குறைபாடு : இக்குறைபாட்டால் பலர், பிறருடன் சேர்ந்து வாழ முடியாமலும், அனுபவ மூலம் அறிந்துகொள்ள முடியாமலும், நன்மை தீமைகளை அறியும் ஆற்றல் இல்லாமலும், மனத்தை ஒரு நிலையில் நிறுத்தி வைக்கக்கூடிய திறமை இல்லாமலும், எடுத்த காரியத்தை ஊக்கத்துடன் செய்து முடிக்கும் ஆர்வம் இல்லாமலும் இருக்கிறார்கள். விரும்பத் தகாத வழிகளில், அவர்களுக்கு மித மிஞ்சிய மன உந்துதல், ஆசை உண்டாகின்றது. அதனால் சமூகத் தவறு என்பதை உணர மறுக்கிறார்கள். இவ்வாறு உள்நோக்கு அறிவும், சிந்தனா ஆற்றலும் இல்லாதிருப்பது ஒரு மனநோயேயாகும்.
சட்டங்கள் : இவைகளும் குற்றவாளிகளை உண்டாக்கிவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, நோயாளியைக் காப்பாற்ற, அவசர நிலைக்காக, மருத்துவமனைக்கு விரைந்து செல்லும் ஒருவன் இடையில் விபத்து ஏற்படுத்தினால், அவனும் சட்டமீறல் செய்தவன் ஆகிறான்.இளங் குற்றவாளிகள் (Juvenile delinquents) பரம்பரையைக் கவனித்தால், அவர்களிடையே அறிவின்மையே மிகுதியாகக் காணப்படும். அந்த குற்றவாளிகளுடன் பிறந்தோரும், அறிவு குறைந்தவராகவே இருப்பர். ஆகவே, குற்றவாளிகளை ஆராயும்பொழுது, அவர்களுடைய மரபை ஆராய்வதைவிட, அவர்களுடைய சொந்த வரலாற்றை ஆராய்வதே பயனுடையதாகும்.[11]அளவு கடந்த மனச்சோர்வே தற்கொலைகளில் பெரும்பாலானவற்றிற்குக் காரணம் ஆகும்.
சூழ்நிலை : சூழ்நிலையுடன் வேறு காரணங்களும் சேர்ந்து செயற்படும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவன் சமூகத்தில் நடந்துகொள்ளக் கூடிய முறையை உருவாக்குவது, அவன் சிறுவனையிருக்கும் பொழுதே, அவனுடைய சூழ்நிலை அடித்தளங்களை உருவாக்கும். இதுவே அவனுடைய ஆளுமை ஆகும். எடுத்துக்காட்டாக, குழந்தைப் பருவத்தில் துணிவில் விருப்பம் உண்டாகிவிடுமானால், அவன் வாலிபப் பருவமடையும் பொழுது நன்மை தீமையை எண்ணிப் பாராமல் தீயவர்களுடன் சேர்ந்து, தீய செய்கைககளில் ஈடுபடத் தொடங்கிச் சட்டங்களை மீறிக் குற்றவாளியாகி விடுகிறான்.
நோய்கள் : உடலமைப்பும் உடல் நோய்களும் குற்றங்களுக்குக் காரணமாயிருப்பதுண்டு. எடுத்துக்காட்டாக, காக்காய்வலிப்பு (Epilepsy) என்ற நோயானது, குற்றவாளிகளில் பலருக்கு இருக்கிறது. காக்கைவலி உண்டாகவே, சூழ்நிலை மாற்றம், மனச் சோர்வு, பிறர் புறக்கணிப்பு, அச்சம், இடைவிடாக்கவலை முதலியன உண்டாகிவிடுகின்றன. அவற்றின் காரணமாகக் காக்கைவலியால் பீடிக்கப்பட்ட குழந்தைகள் அமைதியற்றவர்களாகவும், பிடிவாதமுள்ளவர்களாகவும், முன்கோபம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.[12] அதே போல, என்செபலைட்டிஸ் (Encephalitis) என்ற தூக்கநோய், மூளையில் அதிர்ச்சி உண்டாவதால் ஏற்படுகிறது. [13]
மேற்கூறிய காரணங்களால், குற்றம் என்பது பாரம்பரியக் குணங்களும், நரம்பு, உறுப்பு, உள்ளம், சூழ்நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாறுதல்களும் ஒன்றிணைந்து உண்டாக்குவதாகும். சிலரிடம் பாரம்பரிய இயல்புகளும், சிலரிடம் வறுமை, சோர புத்திரத்துவம், மது, குடும்பச் சச்சரவு போன்ற சூழ்நிலைகளும் மிகுதியாயிருக்கும். குழந்தைப் பருவத்தில் அமைவதே, வாழ்நாள் முழுவதும் அமையும். ஆதலால் குற்றவாளியாகும் குணங்கள், குழந்தைப் பருவத்திலேயே அமைந்துவிடுகின்றன. காக்கைவலி, உட்சுரப்புக் (Endocrine) கோளாறு முதலியவைகளும் சமூகத்துடன் ஒத்துழைக்க வொட்டாமல் செய்துவிடுகின்றன. குடும்ப வாழ்வு நிறைவாக இல்லாதவர்களிடம் அளவுகடந்த எதிர்ப்பு, பகைமை, சுயநலம், தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்கள் உண்டாவது இயற்கையே ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://catalog.hathitrust.org/Record/009778100
- ↑ "Criminological Psychology MSc/Diploma". Archived from the original on 2015-01-02. பார்க்கப்பட்ட நாள் 2014-06-22.
- ↑ Richard N. Kocsis, Applied criminal psychology: a guide to forensic behavioral sciences, Charles C Thomas Publisher, 2009, pp.7
- ↑ Andrews, D. A.; Bonta, James (2010). The Psychology of Criminal Conduct. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781437778984.
- ↑ https://scholarlycommons.law.northwestern.edu/cgi/viewcontent.cgi?article=3432&context=jclc
- ↑ http://criminal-justice.iresearchnet.com/forensic-psychology/history-of-forensic-psychology/criminal-psychology/
- ↑ https://www.thoughtco.com/hans-eysenck-4691630
- ↑ https://study.com/academy/lesson/hans-jurgen-eysenck-personality-theory-lesson-quiz.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-01-04. பார்க்கப்பட்ட நாள் 2020-01-04.
- ↑ https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736%2810%2961207-X/fulltext
- ↑ https://www.secureteen.com/juvenile-delinquency/juvenile-delinquency-what-makes-teens-commit-crimes/
- ↑ https://journals.plos.org/plosmedicine/article?id=10.1371/journal.pmed.1001150
- ↑ https://www.ncbi.nlm.nih.gov/pubmed/25683195