உள்ளடக்கத்துக்குச் செல்

குற்றப் புலனாய்வுத் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குற்றப் புலனாய்வுத் துறை
Department of Criminal Intelligence
துறை மேலோட்டம்
அமைப்புஏப்ரல் 1904 (1904-04)
பின்வந்த அமைப்பு
வகைஉளவுத்துறை
ஆட்சி எல்லைபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
நிலைமாற்றப்பட்டது
தலைமையகம்சிம்லா, பிரித்தானிய இந்தியா
அமைப்பு தலைமை
  • இயக்குநர்
  • துணை இயக்குநர்
மூல நிறுவனம்உள்துறை

குற்றப் புலனாய்வுத் துறை (Department of Criminal Intelligence) பிரித்தானிய ஆட்சியின் போது இந்திய அரசாங்கத்தின் மத்திய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உளவு அமைப்பாக இருந்தது. முதலில் மத்திய குற்றப் புலனாய்வுத் துறை என்று அழைக்கப்பட்டது. அப்போது இந்திய வைசுராயாக இருந்த கர்சன் பிரபுவால் நிறுவப்பட்டது.[1] இந்தியக் காவல் அமைப்பை ஆய்வு செய்து சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்த, ஆண்ட்ரூ என்டர்சன் லெய்த் ப்ரேசர் தலைமையில் 1903 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்ட இந்தியக் காவல் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் இத்துறை உருவாக்கப்பட்டது. சர் அரோல்டு சுடூவர்ட்டு இத்துறையின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[2] கர்சன் பிரித்தானிய இந்தியாவின் அனைத்து மாகாணங்களிலும் குற்றப் புலனாய்வுத் துறைகளையும் நிறுவினார்.[1]

குற்றப் புலனாய்வுத் துறை பின்னர் உளவுத்துறையாக மாறியது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Popplewell, Richard J. (1995). Intelligence and Imperial Defence: British Intelligence and the Defence of the Indian Empire 1904–1924. Routledge. p. 42. ISBN 0-7146-4580-X.
  2. Riddick, John F. (2006). The History of British India. Greenwood Publishing Group. p. 87. ISBN 0-313-32280-5.
  3. Balachandran, Vappala (5 May 2020). "How Viceroy Lord Mayo's Assassination Led to Creation Of India's First Intelligence Bureau". Outlook India. Retrieved 15 November 2024.