உள்ளடக்கத்துக்குச் செல்

குறைவு துத்தநாக ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறைவு துத்தநாக ஆக்சைடு (Depleted zinc oxide) என்பது அணு நிறை 64 கொண்ட துத்தநாக ஒரிடத்தானின் ஆக்சைடு ஆகும். அழுத்த நீர் உலைகளில் இது ஒரு அரிப்புத் தடுப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு 64Zn இன் செறிவு குறைத்தல் அவசியமானதாகும். ஏனெனில் ஓரிடத்தானின் செயலூக்கம் நியூட்ரான் பிடிப்பால் 65Zn ஆக மாற்றமடைகிறது. அரைவாழ்வுக் காலம் 244.26 நாட்கள் கொண்ட 65Zn 1.115 இலத்திரன்வோல்ட் அளவுள்ள காமா கதிர்களை உமிழ்கிறது[1]. இயற்கையில் 64Zn 48.6%,காணப்படுகிறது என்றாலும் குறைவு துத்தநாக ஆக்சைடில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அழுத்த நீர் அணு உலையின் முதன்மை நீர்ச்சுழற்சியில் துத்தநாக ஆக்சைடு கூடுதலாக சேர்ப்பதால் அரிப்பு குறைக்கப்படுகிறது. இதனால் கரைக்கப்பட்ட பொருட்களின் அளவு, குறிப்பாக கோபால்ட் 60 இன் அளவு குறைகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Roost, E.; Funck, E.; Spernol, A.; Vaninbroukx, R. (1972). "The decay of 65Zn". Zeitschrift für Physik 250 (5): 395. doi:10.1007/BF01379752. Bibcode: 1972ZPhy..250..395D. 

வெளி இணைப்புகள்

[தொகு]
  • "Depleted Zinc Isotopes". tracesciences.com. Archived from the original on 2008-07-04. பார்க்கப்பட்ட நாள் 2008-12-13.
  • "Depleted Zinc for the Nuclear Industry" (PDF). Nukem. பார்க்கப்பட்ட நாள் 2008-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறைவு_துத்தநாக_ஆக்சைடு&oldid=3550929" இலிருந்து மீள்விக்கப்பட்டது