குறைந்த மூலக்கூறு எடையுடைய புல்லரீன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபதுபக்கபரிமாண புல்லரீன் C20

குறைந்த மூலக்கூறு எடையுடைய புல்லரீன்கள் (Lower Fullerene)என்பது 60 கார்பன் அணுக்களை விட குறைவான அணுக்களை கொண்டிருக்கும் மூலக்கூறுகள் ஆகும். இது கூண்டு போன்ற இணைந்த-வளைய கட்டமைப்பு கொண்ட அறுகோணங்கள் மற்றும் ஐங்கோணங்கள் ஆகும். இதில் ஒவ்வொரு பலகோணத்தின் மூலையில் ஒரு கார்பன் அணுவும் ஒவ்வொரு பலகோண விளிம்பில் ஒரு பிணைப்பு உள்ளது

பண்புகள்[தொகு]

மற்ற கோணங்கள் அல்லாது அறுகோணங்களாலும், ஐங்கோணங்களாலும் கொண்ட புல்லரீன்களில் சரியாக 12 ஐங்கோணங்கள் இருக்கும். இந்தப் புல்லரீன்கள்  a = 2 (n + 10) என்ற விதிக்கு உட்படுகின்றன. இங்கு n என்பது அறுகோணங்களின் எண்ணிக்கை மற்றும் a என்பது கார்பன் அணுக்களின் எண்ணிக்கை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]