குறைந்தபட்ச தீப்பற்றும் ஆற்றல்
குறைந்தபட்ச தீப்பற்றும் ஆற்றல் (Minimum ignition energy) என்பது ஒரு பொருள், முக்கியமாக வாயு கலவை தீப்பற்றத் தொடங்கும் அளவுக்கு தேவையான குறைந்தபட்ச மின்னழுத்தம் அல்லது ஆற்றல் அளவாகும். வெடிப்பு பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆகியவற்றில் இதுவொரு பாதுகாப்பு பண்பாகும். எரிபொருள்-காற்று கலவைகளின் பற்றவைப்பு திறனை குறைந்தபட்ச தீப்பற்றும் ஆற்றல் தீர்மானிக்கிறது. இங்கு எரிபொருள் என்பது எரியக்கூடிய வாயுப்பொருள் எதுவாகவும் இருக்கலாம். ஒரு மின்தேக்கியில் சேமிக்கப்படும் குறைந்தபட்ச மின் ஆற்றலாக இது வரையறுக்கப்படுகிறது. இந்த ஆற்றல் வெளியேற்றப்படும்போது, குறிப்பிட்ட சோதனை நிலைமைகளின் கீழ் எரிபொருள் மற்றும் காற்றின் பற்றவைக்கக்கூடிய கலவையை பற்றவைக்க இது போதுமானதாகும்.[1]குறைந்தபட்ச தீப்பற்றும் ஆற்றல் என்பது பற்றவைப்பின் செயல்திறனுக்கான மதிப்பீட்டு அளவுகோல்களில் ஒன்றாகும். மின்னியல் ஆற்றல் வெளியேற்றம், இயந்திர பற்றவைப்பு மூலங்கள் அல்லது மின்காந்த கதிர்வீச்சு ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பயனுள்ள பற்றவைப்பு மூலங்களைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கையை வடிவமைப்பதற்கு குறைந்தபட்ச தீப்பற்றும் ஆற்றல் ஒரு முக்கியமான அளவுருவாகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Minimum ignition energy MIE or E_min". Archived from the original on 2019-09-02. Retrieved 2021-08-15.
- ↑ "Sicherheitstechnische KenngrößenErmitteln und bewerten" (PDF). Berufsgenossesnschaft Rohstoffe und chemischeEnergie. Archived from the original (PDF) on 2021-08-15.