உள்ளடக்கத்துக்குச் செல்

குறுவாற் பராடிகல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுவாற் பராடிகல்லா
பப்புவா நியூகினியில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. brevicauda
இருசொற் பெயரீடு
Paradigalla brevicauda
ரொத்சுசைல்டு உம் ஃகார்ட்டெருட்டு, 1911

குறுவாற் பராடிகல்லா (Paradigalla brevicauda) என்பது நடுத்தர அளவிலான, அதாவது கிட்டத்தட்ட 23 செமீ நீளமான அடர்ந்த, கருநிற இறகுகளைக் கொண்ட சந்திரவாசி இனங்களைச் சேர்ந்த பறவையினம் ஒன்றாகும். இது மெல்லிய சொண்டையும் கண்களுக்கு முன்பாக பிரகாசமான மஞ்சள் மற்றும் நீல நிறங்களிலான தொங்கு சதையையும் கொண்டிருக்கும். இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகள் உருவமைப்பிற் பெரும்பாலும் ஒத்திருப்பினும் பெண் பறவையானது ஆண் பறவையிலும் ஒப்பீட்டளவிற் சிறியதாயும், இறகுகள் நிறம் மங்கியனவாயும் தொங்கு சதைகள் சிறியனவாயும் இருக்கும்.

குறுவாற் பராடிகல்லா இனமானது அதனை ஒத்த இனமான நெடுவாற் பராடிகல்லா பறவையினத்திலிருந்து வேறுபடுவது இதன் சிறிய பருமன், ஒப்பீட்டளவிற் சிறியதான வாலிறகுகள் மற்றும் தொங்கு சதையில் செந்நிறமற்றிருப்பது என்பவற்றிலாகும். இப்பறவையினம் தனியொரு பறவையுடன் மாத்திரமே கலவியில் ஈடுபடுவதாக முன்னர் கருதப்பட்ட போதிலும், இவ்வினத்தின் பல பறவைகளுடனும் கலவியில் ஈடுபடுவதாக இப்போது வகைப்படுத்தப்பட்டுள்ளது[2]. இப்பறவையினம் நியூகினித் தீவின் மலைசார் காடுகளிற் பரவிக் காணப்படும். இதன் முதன்மையான உணவுகள் பழங்களும் விதைகளும் பூச்சிகளுமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Paradigalla brevicauda". IUCN Red List of Threatened Species 2016: e.T22706148A94052907. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706148A94052907.en. https://www.iucnredlist.org/species/22706148/94052907. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Bernhard Grzimek, Grzimek's Animal Life Encyclopedia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0787653624 Text accessed at Answers.com.
  • BirdLife International (2004). Paradigalla brevicauda. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 12 May 2006. இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.

வெளித் தொடுப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுவாற்_பராடிகல்லா&oldid=3603807" இலிருந்து மீள்விக்கப்பட்டது