குறும்பி
குறும்பி, அல்லது மருத்துவச் சொற்களில் செருமென் (cerumen) எனப்படுவது, மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளின் செவிக்குள் சுரக்கும் மெழுகு போன்ற ஒரு பொருள் ஆகும். இவை பழுப்பு, ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் உள்ளிட்ட பல வண்ணங்களில் இருக்கலாம். குறும்பி, மனிதக் காதுகளின் தோலைப் பாதுகாத்து, சுத்தம் மற்றும் உயவிடலிற்கு உதவுகிறது. மேலும் பாக்டீரியா, பூஞ்சை, மற்றும் தண்ணீருக்கு எதிராகவும் பாதுகாப்பை வழங்குகிறது.[1]
குறும்பியின் முக்கிய கூறுகளில் ஒன்று செருமன். இது ஒரு வகை மாற்றியமைக்கப்பட்ட வியர்வை சுரப்பியால் உற்பத்தி செய்யப்படுகிறது. செபம் (sebum) என்னும் மற்றொன்று, ஒரு எண்ணெய்த் திரவம் ஆகும். இவை இரண்டும் வெளிப்புற காதுக்குழாயில் அமைந்துள்ள சுரப்பிகளால் தயாரிக்கப்படுகின்றன.[2] காதுக்குழாயின் வேதியியல் கலவையானது நிறைவுற்ற மற்றும் நிறைவுறா நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்கள், ஆல்கஹால்கள், ஸ்குவலீன் மற்றும் கொழுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. குறும்பியில் இறந்த சரும செல்கள் மற்றும் முடியும் கூட உள்ளன .[3]
அதிகப்படியான அல்லது சுருக்கமான செருமன் என்பது குறும்பி உருவாக்கம் காதுக்குழாயில் ஒரு அடைப்பை ஏற்படுத்துவது ஆகும். மேலும், இது செவிப்பறைக்கு எதிராக, அல்லது வெளிப்புற காதுக்குழாயை அடைக்கலாம்; அல்லது செவித்திறன் கருவிகளைத் தடுக்கலாம். இதனால் செவித்திறனை இழக்கவும் வாய்ப்பு உண்டு.[2]
உடலியல்
[தொகு]
ஈர அல்லது உலர்
[தொகு]மரபணு ரீதியாக இரண்டு வகையான குறும்பிகள் உள்ளன: ஈர வகை (உலகின் பெரும்பான்மையானது) மற்றும் உலர் வகை. இந்த வேறுபாடு "ABCC11" மரபணுவால் ஏற்படுகிறது. ஈரக் குறும்பி வெளிர் பழுப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும், மேலும் பிசுபிசுப்பு மற்றும் ஒட்டும் நிலைத்தன்மையைக் கொண்டிருக்கும். இது சுமார் 50% கொழுப்பு ஆகும்.[4] ஈர வகைக் குறும்பியானது அக்குள் நாற்றத்துடன் தொடர்புடையது. இது வியர்வை உற்பத்தியால் அதிகரிக்கிறது. [5]
சில கிழக்கு ஆசியர்கள் (யமாத்தோ ஜப்பானியர்கள் உட்பட) தென்கிழக்கு ஆசியர்கள் மற்றும் பூர்வீக அமெரிக்கர்கள் (இனுயிட் உட்பட) உலர் குறும்பியைக் கொண்டு பிறக்க அதிக வாய்ப்புள்ளது (சாம்பல் நிறத்தது) அதே நேரத்தில் ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் பிற கிழக்கு ஆசியர்கள் (ஐனு உட்பட) ஈர வகைக் குறும்பியைக் கொண்டு பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது. (பழுப்பு, அடர் ஆரஞ்சு முதல் இருண்ட-பழுப்பு மற்றும் ஈரப்பதத்துடன்).[6][7][8] 30-50% தெற்காசியர்கள், மத்திய ஆசியர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் உலர் வகை செருமெனைக் கொண்டுள்ளனர்.[9] [[பகுப்பு:மெழுகுகள்]] [[பகுப்பு:காது]]
- ↑ "Earwax". american-hearing.org. American Hearing Research Foundation. 2008. Archived from the original on 25 February 2009. Retrieved 12 February 2009.
- ↑ 2.0 2.1 Khan S (2019). "Cerumen impaction". The APRN and PA's Complete Guide to Prescribing Drug Therapy. doi:10.1891/9780826179340.0061. ISBN 978-0-8261-7933-3. பிழை காட்டு: Invalid
<ref>tag; name "Khan_2007" defined multiple times with different content - ↑ "The organic composition of earwax". The Journal of Otolaryngology 20 (3): 212–5. June 1991. பப்மெட்:1870171.
- ↑ "Impacted cerumen: composition, production, epidemiology and management". QJM 97 (8): 477–88. August 2004. doi:10.1093/qjmed/hch082. பப்மெட்:15256605.
- ↑ "A SNP in the ABCC11 gene is the determinant of human earwax type". Nature Genetics 38 (3): 324–330. March 2006. doi:10.1038/ng1733. பன்னாட்டுத் தர தொடர் எண்:1546-1718. பப்மெட்:16444273. http://kumel.medlib.dsmc.or.kr/handle/2015.oak/33472.
- ↑ "Cerumen types in Eskimos". American Journal of Physical Anthropology 47 (2): 209–10. September 1977. doi:10.1002/ajpa.1330470203. பப்மெட்:910884.
- ↑ "Miscellaneous musings on the Ainu, I". Ahnenkult.com. Archived from the original on 11 June 2016. Retrieved 2014-04-28.
- ↑ Overfield T (1985). Biologic variation in health and illness: race, age, and sex differences. Menlo Park, Calif: Addison-Wesley, Nursing Division. p. 46. ISBN 978-0-201-12810-9.
... most common type in Whites and Blacks is dark brown and moist. Dry wax, most common in Orientals and Native Americans, is gray and dry. It is flaky and may form a thin mass that lies in the ear canal.
- ↑ "The science of stinky sweat and earwax". Australian Broadcasting Corporation. 2015-04-14.