குறும்பனை சி பெர்லின்
குறும்பனை சி பெர்லின் (Kurumpanai C. Berlin, பிறப்பு: 30 மே 1966) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலுக்கு மேற்கே 4.5 கி.மீ. தொலைவிலுள்ள குறும்பனை என்ற கடற்கரை கிராமம் இவரது சொந்த ஊராகும். தமிழ் எழுத்தாளர், கட்டுரையாளர், களச்செயல்பாட்டாளர், கடல்சார் சுற்றுச் சூழல் ஆர்வலர், பத்திரிகையாளர், பேச்சாளர் மற்றும் சமூக சேவகர் என்று பன்முகம் கொண்ட ஆளுமையாகத் திகழ்கிறார். சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள்[1] எழுதியுள்ளார். பல சமூகப் பணி தொடர்பான இயக்கங்களில் முக்கியமான பொறுப்புகளில் உள்ளார்.[2]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]குறும்பனை சி.பெர்லின் கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை கிராமத்தில் கிறாசையன், அமிர்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். மின் மற்றும் மின்னணு பொறியியல் பாடத்தில் பட்டயமும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப்பட்டமும் பெற்றார். ஆயுள் காப்பீட்டு முகவராகப் பணியாற்றி வருகிறார். 'கடலுக்குள்ளே... கடலுக்குள்ளே...' என்னும் சிறுகதை தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் இவர் அறிமுகமானார். கடல்சார்மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தொடர்ந்து சிறுகதைகளை எழுதிவருகிறார். ஆறு நாவல்களை எழுதியுள்ளார். கடற்கரைப்பகுதி பேச்சுமொழியின் சொற்களையும் கடல்சார் கலைச்சொற்களையும் திரட்டி நெய்தல் சொல்லகராதி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிறுகதைகள்
[தொகு]- . கடலுக்குள்ளே......கடலுக்குள்ளே
- . கடலின் கருவறையில்
- . நீந்திக் களித்த கடல்
- . கடல் தண்ணி கரிக்குது[3]
- . கண்ணீர் சமுத்திரம்
- . நெஞ்சை நெகிழச்செய்யும் நெய்தல் சிறுகதைகள்[4]
நாவல்கள்
[தொகு]1. கடல் அடி
2. சேலுகேடு
3. நீவாடு
4. தலைச்சுமடுகாரி
5. மானத்துக்கு அஞ்சி....சுனாமி நாவல்[5]
6. குளியாளி
கட்டுரைகள்
[தொகு]- கடலோரக் கவலைகள்
- கடலில் கரையும் குமரிக் கடற்கரை
- இனையம் காக்க இணைவோம்
- ஓக்கி புயலும் நோக்கா செயலும்
- மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் குப்பையில் போன கோப்புகள்
- கடல் தண்ணிய குடிக்க...
- காஜா புயல்; மறைக்கப்பட்ட சுனாமி
- உரிமம் கேட்டு உரிமைக்குரல்
- கன்னியாகுமரி காக்கக் களம் காண்போம்
- கதிகலக்கும் கதிரியக்கம்
- நெய்தல் சொல்லகராதி
- நிறைவேறுமா மீனவர் கோரிக்கைகள்
- காத்திருக்கும் கடலோடிகள்
- சரக்குப்பெட்டக துறைமுகம்....தாங்குமா மாவட்டம்
- தேவை தூண்டில் வளைவல்ல ....மீன்பிடித்துறைமுகம்
- மீன்வள தினமல்ல.... மீனவர் தினம்
- ஏழ்குறும்பனை நாடும் இஞ்ஞாசியரும்
- கடலோடிகள் வலுவானால்
- தலைமுறை காத்த தலைவர் சேசையா
- உலக கடல்சார் போராளி லிங்கன்
- கடலோர சொல்லகராதி
- அழிக்கவரும் அணுக்கனிம சுரங்கம்
பத்திரிகையாளர்
[தொகு]- விடியலை நோக்கி (ஆசிரியர் குழு)
- நெய்தல் கணியம்(இணை ஆசிரியர்)
- கடலோரம் (ஆசிரியர்)
- கடற்கரை இதழ் (ஆசிரியர்)
சமூகப்பணி
[தொகு]- நெய்தல் மக்கள் இயக்கம் (மாவட்டச் செயலாளர்)
- அணுவுலைக்கு எதிரான மக்கள் இயக்கம்(செயற்குழு உறுப்பினர்)
- மீனவர் வாழ்வுரிமை இயக்கம்(மாநில செயலாளர்)
- இனையம் சர்வதேச சரக்குப் பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம்(இணை ஒருங்கிணைப்பாளர்)
- நெய்தல் சிந்தனை அரங்கம் (ஒருங்கிணைப்பாளர்)
- கடலோர உள்ளாட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு(ஒருங்கிணைப்பாளர்)
- லூர்தம்மாள் சைமன் அரசுப்பணி பயிற்ச்சி மையம்(ஒருங்கிணைப்பாளர்)
- நெய்தல் படைப்பாளர் கூடுகை
- சேலாளி பதிப்பகம்(நிறுவனர்)
- அணுக்கனிமச் சுரங்கம் எதிர்ப்பு மக்கள் இயக்கம்
விருதுகள்
[தொகு]- மனிதநேய முரசு -2006 (பெரியார் -காமராசர் இலக்கிய பேரவை)
- கலை இலக்கிய பெரு மன்றம் மற்றும் புதிய நூற்றாண்டு புத்தக நிறுவன விருது
- மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் இலக்கிய விருது
- நெய்தல் இலக்கிய சாதனையாளர் விருது
- புலவர் எம் காசுமான் நினைவு கடற்கரை விருது -2022
- தங்கத்தமிழ் சாதனையாளர் விருது-2025
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காலியாகும் கடலோர பள்ளிகள்! -எழுத்தாளர், குறும்பனை சி.பெர்லின்". தீக்கதிர். https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/vacant-seaside-schools!---author,-pseudonym-c.-berlin. பார்த்த நாள்: 18 February 2025.
- ↑ Rabi, M. Abdul (2024-10-21). "One lakh people form human chain protest against IREL's atomic mineral mining project in Kanniyakumari". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-02-18.
- ↑ "குறும்பனை சி. பெர்லின்". நூல் உலகம். https://www.noolulagam.com/s/?stext=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF.+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D&si=2. பார்த்த நாள்: 18 February 2025.
- ↑ Berlin, Kurumpanai C., ed. (2016). "Nenjai negizha cheyyum neidhal sirukathaigal". Arivu pathippagam. Retrieved 2025-02-18.
- ↑ C, Thivya (2022-12-17). "The Practices of the Fishermen of the Kanyakumari district as shown in the novel 'Maanatthukku Anji (Fear for the Reputation)'". International Research Journal of Tamil (in ஆங்கிலம்). pp. 72–77. doi:10.34256/irjt224s1712. Retrieved 2025-02-18.