உள்ளடக்கத்துக்குச் செல்

குறுமாலி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருமலி ஆற்றில் சூரிய உதயம்
குறுமாலி ஆறு. புதுக்காடு அருகே தொடருந்து பாலத்திலிருந்து காட்சி

குறுமாலி ஆறு (Kurumali River) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் ஓடும் கருவண்ணூர் ஆற்றின் முக்கிய கிளை ஆறாகும். இது திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சிம்மோனி வனவிலங்கு சரணாலயத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகிறது.[1]

ஆற்றோட்டம்

[தொகு]

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சிம்மனி வனவிலங்கு சரணாலயத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவுகளில் குருமலி ஆறு உருவாகிறது. குறுமாலி ஆற்றின் குறுக்கே சிம்மனி அணை கட்டப்பட்டுள்ளது. முப்ளி ஆறு கரிகுளத்தில் குறுமாலி ஆற்றில் கலக்கிறது. இதன் பின்னர் பாலப்பள்ளி, வெட்டிங்கபடம், வரந்தரப்பள்ளி, வெள்ளாரம்படம், முப்ளியம், பந்தல்லூர், நெல்லை, நந்திக்கரை, புதுக்காடு மற்றும் செருவயல் ஆகிய நகரங்களைக் கடந்து இந்த ஆறு செல்கிறது.[2] மேலும் கீழடியில் குறுமாலி ஆறு மணலி ஆற்றுடன் ஆராட்டுப்புழாவில் இணைந்து கருவண்ணூர் ஆற்றை உருவாக்குகிறது.[3]

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • செருவல் – ஆற்றின் கரையில் உள்ள கிராமம்
  • சிம்மோனி அணை – கேரளாவின் முக்கிய நீர்ப்பாசன அணைகளில் ஒன்று.

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.touristlink.com/india/kurumali-river/overview.html
  2. Power, India Central Board of Irrigation and (1972). Publication (in ஆங்கிலம்). The Board.
  3. "About the Rivers of Kerala". Tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுமாலி_ஆறு&oldid=3406438" இலிருந்து மீள்விக்கப்பட்டது