குறுந் தாவரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறுந் தாவரங்கள்[தொகு]

== # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ==
பெரிய மரங்களாகவும்  ஆயிரக்கணக்கணக்கான வயதுடையதாகவும்  வளரும் மரங்களை சிறிய மரங்களாக  வளர்க்கப்படும்   மரங்களே  குறுந்தவரங்கள்  என அழைக்கப்படுகிறது .

குறுந் தாவரங்கள் வளர்ப்பு முறை

 1.பதி  வைத்தல் :

== == # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ==
==

விதை மூலம் குறுந் தாவரங்கள் பெறலாம் என்றாலும் இம் முறை மூலம் ஒரு முதிய தோற்றமுடைய மரத்தை பெற பல ஆண்டுகள் ஆகும் .ஒரு மரத்தின் கிளையை தேர்ந்தெடுத்து அடி பாகத்தில் கூறிய கத்தியால் பட்டையை வெட்டி எடுத்து அந்த இடத்தில் ஈர மண்ணால் சுற்றி கட்டி விட வேண்டும் .இம்மண் எப்பொழுதும் ஈரமாக இருக்க நீர் ஊற்ற வேண்டும் .அதன் பின் தயார் நிலையில் வைக்கப்பட்டட்டியில் நாட்ட வேண்டும். 2.வேர்களை பிரித்து எடுத்தல் : சில மரங்களில் அடிப் பகுதியில் இருந்து அதன் கன்றுகள் வளர்வதுண்டு.இப்படி வளர்வதை தாய் மரத்தில் இருந்து பிரித்து எடுத்து அதன் வேர்களை வெட்டி ,அதன் கி ளைகளை அளவான உயரத்தில் வெட்டி யும் சட்டியில் நாட்ட வேண்டும் . குறுந் தாவர வளர்ப்பிற்கு தேவையான வை : 1.மண் 2.உரம் 3.நீரிடல்

4.வெளிச்சம் 5.குறைந்தளவு வெப்பம் மீள் நடுகை முறை : குறுந் தாவரங்கள் வளரும் சட்டிகளில் உள்ள மண் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதால் இத் தாவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மீள் நடுகை செய்தல் வேண்டும் இப்படி செய்வது வேர்களை ஊக்குவிப்பதுடன் வளர்சிதைமாற்றத்தை கூடி மரங்கள் திடமாக வளர உதவுகிறது . நோய்கள் : வேர் அழுகுதல் : கிருமிகள் வேர்கள் இறக்கும்போது அதிலுள்ள உணவுகளை உறிஞ்சுவதால் சிறு வேர்கள் அழிக்கப்படுகின்றன .இதனால் மரம் பலவீனமாவதுடன் தண்டுகள் இலைகள் வீரியத்தை இழக்கும் .பொதுவாக சட்டியின் நீர் வடிவை சீர் செய்து மரங்களை நிழலில் சில நாட்கள் வைத்தால் வேர் நோயை குணமாக்கலாம். குறுந் தாவரங்களை சுத்தம் செய்தல்:

1.பூவாளி கொண்டு மழை போல் மரம் முழுவதும் நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்ய வேண்டும் . 2.நீர் நிரம்பிய .பெ ரிய பாத்திரத்தில் அமிழ்த்தி சுத்தம் செய்யும்போது அதில் உள்ள நுண்ணியிர்களும்,பூச்சிகளும் அழிந்து விடும். . 3.உபயோகப் படுத்தப்பட்ட பல் துலக்கும் தூரிகைகளின் உதவியுடன் மரத்தின் கிளைகளை விலக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

குறுந் தாவர வளர்ப்பிற்கு பொருத்தமான தாவர வகைகள் :

1..புளி 2.மூங்கில் 3.அரசமரம் 4.இத்தி 5.மாதுளை 6.ஆலமரம் முடிவுரை ;குறுந் தாவர வளர்ப்பு ஆரம்பத்தில் ஜப்பான் சீனா போன்ற நாடுகளில் இருந்தாலும் இன்று உலகின் பல நாடுகளிலும் பரவி உள்ளது .எனவே குறுந் தாவர வளர்ப்பு நம் உள்ளூரிலும் புதுப் பொலிவுடன் மிளிரும் என நம்பலாம் .

மேற்கோள்கள் குறுந்தாவரம்,கலாநிதி சி.ரவீந்திரநாத் ,நியூ செஞ்சுரி புக் கவுஸபிரைவேட் லிமிடெட் ,சென்னை,ஆகத்து 2005.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுந்_தாவரங்கள்&oldid=2723220" இருந்து மீள்விக்கப்பட்டது