குறுக்கெழுத்துப் புதிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கெழுத்துப் புதிர்

குறுக்கெழுத்துப் புதிர் என்பது குறுக்கும் நெடுக்குமாக வரையப்படும் கோடுகளினால் உருவாகும் கட்டங்களுக்கு இலக்கங்கள் இடப்பட்டு அக்கட்டங்களைச் சொற்களைக் கொண்டு நிரப்புவதற்கு உதவிக் குறிப்புகள் வழங்கப்படும் புதிர் ஆகும். குறுக்கெழுத்துப் புதிர்கள் பத்திரிகைகளில் பெருமளவில் வெளிவருகின்றன. அவற்றுக்கென வெளியாகும் நூல்களும் உள்ளன.

இக்குறுக்கெழுத்துப் புதிரினை முதன்முதலில் அறிமுகம் செய்தவராக அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் வைன் இனங்காணப் பட்டுள்ளார். 1913ஆம் ஆண்டில் "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற இவர் அவ்வாண்டு கிறிஸ்மஸ் சிறப்பு மலரில் குறுக்கெழுத்துப் புதிரினை அறிமுகம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஏனைய அமெரிக்கப் பத்திரிகைகளும் குறுக்கெழுத்துப் புதிர்களை வெளியிடத் தொடங்கின. பின்னர் இங்கிலாந்துக்குப் பரவிய இப்புதிர் இப்பொழுது உலகெங்கும் பிரபல்யம் பெற்றுள்ளது.

தமிழில் குறுக்கெழுத்துப் புதிர்கள்[தொகு]

தமிழிலும் பல குறுக்கெழுத்துப் புதிர்கள் உருவாக்கப் படுகின்றன. பிரபல சஞ்சிகைகள் சிலவற்றில் மட்டுமின்றி தனிப்பட்ட வலைதளங்களில் குறுக்கெழுத்துப் பிரியர்கள் பலவிதமான புதிர்களை வழங்கி வருகிறார்கள். எளிதான வார்த்தை விளையாட்டு என்ற நிலையில் துவங்கி, சற்று சிந்திக்க வைக்கும் அறிவுப் பூர்வமான புதிர்கள், அகழ்வுக் குறிப்புகள் அடங்கிய புதிர்கள் (cryptic clues) என்று பல நிலைகளில் இந்தப் புதிர்கள் அமைக்கப் படுகின்றன. தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்களைப் பொறுத்த வரை திரு. வாஞ்சிநாதன் ஒரு முன்னோடி. இவரைத் தவிர, திரு. பார்த்தசாரதி தமிழில் பல புதிர்களை உருவாக்கியிருக்கிறார் [1] பரணிடப்பட்டது 2019-03-21 at the வந்தவழி இயந்திரம். வலை தளங்களில் திரு. விஜய் சங்கர் அமைக்கும் இலக்யா குறுக்கெழுத்து புதிர்கள் [2], திரு. ராமராவ் அவர்களின் திரை கதம்பம் போன்றவை குறிப்பிடத் தக்கவை.