குறுக்கிட்டான் கருப்பசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறுக்கிட்டான் கருப்பசுவாமி தேவர் சமுதாயத்தில் குலதெய்வமாக வணங்கப்படும் ஒரு நாட்டார் தெய்வமாவார்.

கோயில் அமைவிடம்[தொகு]

இந்த தெய்வத்திற்கான கோயிலானது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி என்ற ஊரிலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவில் கருப்பா ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இக்கோயிலானது கி.பி 19 ஆம் நுற்றாண்டைச் சார்ந்தது.

பெயர்க்காரணம்[தொகு]

முன்பு ஒருமுறை இக்கோயிலினை சுற்றி உள்ள ஆலயங்களில் கோயில் நகைகள் மற்றும் பொருட்களை மாந்திரிகம் படித்த திருடர்கள் எல்லா சாமிகளையும் கண்ணை கட்டி விட்டு பொருட்களை கொள்ளை அடித்து செல்லும் போது குருக்களஞ்சியம் கட்டடத்துக்குள் இல்லாமல் தரையோடு இருந்ததால் அவர்களுக்குத் தெரியவில்லை. திருடர்கள் கொள்ளையடித்து செல்லும் போதும் குறுக்கே சென்று அவர்களை மறித்து கண் தெரியாமல் செய்து விட்டு, திருடர்கள் கொள்ளை அடித்ததையும் அவர்களை தடுத்து நிறுத்தியிருப்பதையும் மக்களுக்குக் காட்டியதால் அன்று முதல் குறுக்கிட்டான் என்று அழைக்கப்படுகிறார்.

வழிபாடு[தொகு]

இக்கோயிலில் நித்தபூசைகள் நடைபெறுகின்றன. ஆண்டில் மகாசிவராத்திரி மற்றும் பங்குனி உதிரம் ஆகிய இரண்டு நாட்களும் திருவிழாக்கள் நடைபெறும். இக்கோயில் வழிபாட்டிற்கு கோயிலைச் சுற்றியுள்ள சொக்கம்பட்டி, வண்ணாம்பொட்டால், வெள்ளிகுளம், வேப்பங்குளம், கடையநல்லூர் ஆகிய ஊர்களின் தேவர்சமுதாயத்தினர் வருகின்றனர். இக்கோயிலில் சாமியாடி வேட்டைக்குச் சென்றுவந்து அருள்வாக்குகள் கூறுவதுண்டு. அதனால் இங்கு குறிகேட்க நிறைய மக்கள் கூடுகின்றனர்.

நிர்வாகம்[தொகு]

இக்கோயில் இந்து சமய அறநிலத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் தலவரலாறு புத்தகம் மற்றும் கல்வெட்டுக்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

மாலை மலர் செய்திக் குறிப்பு