குறிப்புரை (நிரலாக்கம்)
நிரலாக்கத்தில் குறிப்புரை அல்லது குறிப்பு (Comment) என்பது நிரல் மொழியில் ஒரு கூறு ஆகும். ஒரு நிரலில் சேக்கப்படும் அந்த நிரலின் வடிவமைப்பு, ஏரணம், செயற்பாடுகள் பற்றிய குறிப்புகளே குறிப்புரை ஆகும். இவை பொதுவாக நிரல்மொழிமாற்றிகளால் இவை கணித்தலில் பொருப்படுத்தப்படாது. வெவ்வேறு மொழிகளில் குறிப்புரைக்கான குறியீடு மாறுபடுகிறது. நிரல் மொழி ஆங்கிலத்தில் அமைந்தாலும், குறிப்புரைகள் தமிழ் உட்பட எந்த மொழியிலும் அமையலாம்.
தேவை
[தொகு]குறிப்புரைகள் நிரலாளரோ, வேறு ஒருவரோ நிரலை வாசிக்க, திருத்த உதவுகின்றன. நிரலாளர் என்ன செய்ய முயல்கிறார் என்பதை அவருக்கும் பிறருக்கு உணர்த்த இது உதவுகிறது. பலர் நிரல் எழுத தொடங்க முதல் என்ன செய்யப்பட வேண்டும் என்று விபரித்து குறிப்புரை எழுதவர். பின்னர் நிரல் எழுதும் போது எப்படிச் செய்யப்படுகிறது என்று விபரிப்பர். செய்யப்படும் திருத்தங்கள் பற்றியும் குறிப்புரைகள் எழுதப்படும். இந்த வகையில் குறிப்புரை ஆவணப்படுத்தலில் ஒரு அங்கமாகும்.
வழக்கங்கள்
[தொகு]நிரலாக்கத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் நிரலை விபரித்து குறிப்புரை எழுதுவது ஒரு நல் ஒழுக்கமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு வகுப்புகள், செயலிகளின் செயற்பாடுகள், உள்ளீடுகள், வெளியீடுகள் பற்றி குறிப்புகள் அவசியமாக கருதப்படுகின்றன. சிலர் ஒவ்வொரு 5 வரிக்கும் இடையே தகுந்த குறிப்புரை தேவை என கருதுகிறார்கள்.