குறிச்சியா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குறிச்சியா
நாடு(கள்) இந்தியா
பிராந்தியம் கேரளா, தமிழ்நாடு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
29,375 (1981)  (date missing)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3 kfh


குறிச்சியா மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், கேரளாவின், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்திலும் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 29,375 மக்களால் பேசப்படுகிறது.

கோவோகன், குறிச்சியார், குருச்சன் போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இம்மொழி பேசியோரில் பலர் இதனைக் கைவிட்டு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளுக்கு மாறிவருவதாகக் கூறப்படுகின்றது. இதனால் இம்மொழி அழியும் ஆபத்து உள்ள மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிச்சியா_மொழி&oldid=1814163" இருந்து மீள்விக்கப்பட்டது