குறிகைப் பாய்வு வரைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறிகைப் பாய்வு வரைவு (Signal-flow graph) என்பது கணுக்களும் கிளைகளும் கொண்ட ஒரு கட்டப்படம்[1] மற்றும் திசையுறு வரைபடம் ஆகும். இதன் கணுக்கள் நேரியல் இயற்கணித தொடர்புகளின் அணியுடைய மாறிகள் ஆகும். ஒரு குறிகைப் பாய்வு வரைவு பெருக்கத்தையும், கூட்டல்களையும் மட்டுமே வெளிப்படுத்த முடியும். பெருக்கல்களைக் கிளைகளின் சுமைகளைக் குறிக்கப்படும்; கூட்டல்களை கணுக்களில் பல கிளைகள் சேர்வதாக குறிக்கப்படும். குறிகைப் பாய்வு வரைவானது நேரியல் சமன்பாட்டுக் கட்டகத்துடன் ஒன்றுக்கு ஒன்றான தொடர்பை வைத்திருக்கிறது.[2] அத்துடன், இது காரண விளைவுகளை கொண்டிருக்கும் புறநிலை கட்டகத்தின் குறிகை பாய்வையும் விளக்கக் கூடியதாக பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]