குர்ரம்கொண்டா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்ரம்கொண்டா கோட்டை
گرمکنڈہ قلعه - గుర్రంకొండ కోట
Gurramkonda in India
குர்ரம்கொண்டா கோட்டை
ஆள்கூறுகள் 13°46′36.6″N 78°35′10″E / 13.776833°N 78.58611°E / 13.776833; 78.58611
வகை Fort
இடத் தகவல்
உரிமையாளர் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், சித்தூர்
நடத்துபவர் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், சித்தூர்
கட்டுப்படுத்துவது இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், சித்தூர்
மக்கள்
அநுமதி
பொது
இட வரலாறு
கட்டிய காலம் 1714 (1714)

குர்ரம்கொண்டா கோட்டை (Gurramkonda Fort) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மலைக் கோட்டையாகும். இது வட்டத் தலைமையகமான குர்ரம்கொண்டா கிராமத்தில் அமைந்துள்ளது. இது மாவட்டத்தின் பழமையான கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆதாரங்களின்படி, இந்த கோட்டை விஜயநகர சாம்ராச்சியத்தின் போது கட்டப்பட்டது. பின்னர் இது பொ.ச. 1714 இல் கடப்பாவின் நவாப் அப்துல் நபி கானின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. [1] கோட்டையில் உள்ள கற்பலகைகள், கோட்டை, அதன் பிரம்மாண்டமான கோட்டைச் சுவர் மற்றும் உள்ளே உள்ள கட்டிடங்கள் மற்றும் அலுவலக கட்டிடம் "இரங்கின் மகால்" ஆகியவை அப்துல் நபி கானால் கட்டப்பட்டவை என்பதைக் காட்டுகின்றன.

வரலாறு[தொகு]

மலையில் ஒரு வலுவான கோட்டை உள்ளது. அது கடப்பாவின் நவாப் அப்துல் நபி கான் என்பவரால் கிபி 1714 இல் கட்டப்பட்டது . [2] இன்றும் கூட, இது பார்வையிடவும் குறிப்பிடவும் தகுதியானது. கடப்பாவின் நவாப் இக்கோட்டையை மிகவும் பிரபலமானது என்பதை நிரூபித்துள்ளார். பிஜப்பூர் சுல்தானகத்தின் மதிப்பு மிக்க ஆளுநராக நவாப் அப்துல் நபி கானைக் குறிப்பிடுவது சிறப்பாகும். இவரது காலம் பொ.ச. 1714 முதல் தொடங்குகிறது. [3] [4]

நவாப் அப்துல் நபி கான் தற்போதுள்ள இரங்கீன் மகாலை தனது அலுவலகமாக கட்டினார். இன்று, ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த கட்டுமானமானது அதன் முழு அளவிலான சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது. மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்.


காட்சிகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]