குர்பிரீத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குர்பிரீத் சிங் (Gurpreet Singh) ஓர் இந்தியக் குறிவைத்துச் சுடும் விளையாட்டில் வல்லவர். இவர் இந்தியாவில் நடந்த 2010 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் குறிவைத்துச் சுடும் விளையாட்டுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இவர் 2010 அக்தோபர் 7 இல் விஜய குமாருடன் இணைந்து ஆடவர் 25 மீ காற்றுத் துப்பாக்கி இணையர் தங்கப் பதக்கத்தை வென்றார்.[1] அன்றே, இவரும் ஓம்கார் சிங்கும் ஆடவர் 10 மீ காற்றுத் துப்பாக்கி இணையர் தங்கப் பதக்கத்தை வென்றனர்.[2] தவிரவும் ஆடவர் 25 மீ விரைவுச்சூடு கைத்துப்பாக்கி (ஒற்றையர்) வகுப்பில் தனிநபருக்கான வெண்கலப் பதக்கமும் பெற்றார். இவர் இந்தியப் படையைச் சார்ந்தவர். இப்போது இந்தியப் படையில் பணிபுரிகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்பிரீத்_சிங்&oldid=2693740" இருந்து மீள்விக்கப்பட்டது