உள்ளடக்கத்துக்குச் செல்

குர்சித் மக்முது கசூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்சித் மக்முது கசூரி
Khurshid Mahmud Kasuri
2003இல் குர்சித் மக்முது கசூரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மியான் குர்சித் மக்முது கசூரி

18 சூன் 1941 (1941-06-18) (அகவை 83)
இலாகூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா (தற்போதைய பாக்கித்தான்)
தேசியம்இந்தியர் (1941-1947), பாகிஸ்தானியர் -1947 முதல் தற்போது வரை
அரசியல் கட்சிபாக்கித்தான் முஸ்லிம் லீக் (என்)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்கித்தான் முஸ்லிம் லீக் (என்)
பெற்றோர்

குர்சித் மக்முது கசூரி (Khurshid Mahmud Kasuri) (பிறப்பு, 18 ஜூன் 1941) ஓர் பாகிஸ்தானிய அரசியல்வாதியும் மற்றும் எழுத்தாளரும் ஆவார். இவர் நவம்பர் 2002 முதல் நவம்பர் 2007 வரை பாக்கித்தானின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.[1] அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகராகவும், இம்ரான் கானால் நிறுவப்பட்ட அரசியல் கட்சியான பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு கட்சியின் காஷ்மீர் தொடர்பான பணிக்குழுவின் தலைவராகவும், கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார். மேலும் இவர் 'நைதர் எ ஹாக் நார் எ டோவ்' என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார்.[2]

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர் பஞ்சாப் மாகாணத்தின் இலாகூரில் பிறந்தார்.[3][4] பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற பிறகு, கசூரி பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பின்னர் கிரேஸ் விடுதியில் வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டார். இவர் நைஸ் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியையும் பயின்றார்.

அரசியல்

[தொகு]

ஏர்-மார்ஷல் முகமது அஸ்கர் கான் தலைமையிலான “தெஹ்ரீக்-இ-இஸ்தக்லால்” (டிஐஐ) கட்சியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அதன் பொதுச்செயலாளராக உயர்ந்தார். 1993 ஆம் ஆண்டில் பிரதான எதிர்க்கட்சியான பாக்கித்தான் மக்கள் கட்சியின் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பூட்டோ சியா-உல்-ஹக் ஆகியீர்ன் ஆட்சியின்போது இருவருக்கும் இவர் எதிர்ப்பு தெரிவித்ததற்காக பல சந்தர்ப்பங்களில் சிறைக்குச் சென்றார்.[5] 1997 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் தேசிய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தகவல் மற்றும் ஊடக மேம்பாட்டுக்கான நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்ரியுள்ளார். நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது அரசியலமைப்பின் 15 வது திருத்தத்தை ('ஷரியத் மசோதா') அவர் கடுமையாக எதிர்த்தார்.[6] 15வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவர் தேசிய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 1981 இல் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான இயக்கத்தில் சேர இவர் வெளியுறவு அலுவலகத்தை விட்டு வெளியேறினார். பின்னர் கைது செய்யப்பட்டார்.

2012 ஆம் ஆண்டில், "அமைதி மற்றும் முன்னேற்ற மையத்தில்" அமைதி மற்றும் மோதல் ஆய்வுகள் சம்பந்தப்பட்ட தலைப்புகள் குறித்து இவர் இந்திய அரசியல்வாதி ஜஸ்வந்த் சிங்குடன் சேர்ந்து விரிவுரை நிகழ்த்தினார். மேலும் மேற்கு வங்க ஆளுநர் என். கே. நாராயணனையும் சந்தித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former Foreign Ministers". Ministry of Foreign Affairs Government of Pakistan. Retrieved 28 August 2015.
  2. "Khurshid Mahmud Kasuri: Neither hawk nor dove". 2015-09-11. Retrieved 2016-08-28.
  3. Singh, Sohan (2000). Life & Exploits of Banda Singh Bahadur (in ஆங்கிலம்). Publication Bureau, Punjabi University. ISBN 978-81-7380-671-1.
  4. Ibbetson, Sir Denzil (2018-10-13). Panjab Castes (in ஆங்கிலம்). Creative Media Partners, LLC. ISBN 978-0-342-74738-2.
  5. "Khursheed Mehmood Kasuri - Biography, Profile". Retrieved 2016-08-28.
  6. Kasuri, Khurshid (2016). Neither A Hawk Nor a Dove. Pakistan and India: Oxford University Press. p. 59. ISBN 9780199401932.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்சித்_மக்முது_கசூரி&oldid=4093093" இலிருந்து மீள்விக்கப்பட்டது