குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோ ஆர்லம் புரூன்ட்லாண்ட்
2007ஆம் ஆண்டு புரூன்ட்லாண்ட் நோர்வே தொழிலாளர் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றுதல்.
நோர்வேயின் பிரதமர்
பதவியில்
3 நவம்பர் 1990 – 25 அக்டோபர் 1996
அரசர் ஒலாவ் V
அரால்ட் V
முன்னவர் யான் சைசு
பின்வந்தவர் தோர்ப்யான் ஜக்லாண்ட்
பதவியில்
9 மே 1986 – 16 அக்டோபர் 1989
அரசர் ஒலாவ் V
முன்னவர் கேர் வில்லோக்
பின்வந்தவர் யான் சைசு
பதவியில்
4 பெப்ரவரி 1981 – 14 பெப்ரவரி 1981
அரசர் ஒலாவ் V
முன்னவர் ஒட்வார் நோர்ட்லி
பின்வந்தவர் கேர் வில்லோக்
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர்
பதவியில்
13 மே 1998 – 21 சூலை 2003
Secretary-General கோபி அன்னான்
முன்னவர் இரோசி நாகஜிமா
பின்வந்தவர் லீ யோங்-வூக்
தனிநபர் தகவல்
பிறப்பு 20 ஏப்ரல் 1939 (1939-04-20) (அகவை 84)
பேரும், நோர்வே
அரசியல் கட்சி தொழிலாளர் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அர்னே ஒலாவ் புரூன்ட்லாண்ட்
படித்த கல்வி நிறுவனங்கள் ஓசுலோ பல்கலைக்கழகம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
கையொப்பம்

குரோ ஆர்லம் புரூன்ட்லாண்ட் (Gro Harlem Brundtland) (பிறப்பு குரோ ஆர்லம், 20 ஏப்ரல் 1939) நோர்வேயின் பிரதம மந்திரியாக இருந்தவர். சோசலிச மக்களாட்சி அரசியல்வாதியாகிய இவர் பேராளர்,மருத்துவர் எனப் பன்முக திறன் கொண்டவர். பன்னாட்டு பேண்தகு வளர்ச்சி மற்றும் பொது சுகாதாரத்திற்காகப் போராடும் ஓர் தலைவர். உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனராகப் பணியாற்றி உள்ளார்.தற்போது ஐ. நா செயலாளர் நாயகம் பான் கி மூனின் சார்பாக வானிலை மாற்றங்களுக்கான தூதராகப் பணியாற்றி வருகிறார்.[1] இவருக்கு சுற்றுச்சூழல் தலைமைத்திறனுக்காக 2008ஆம் ஆண்டின் கட்டிடவடிவியலுக்கான தாமசு ஜெஃப்பர்சன் பதக்கம் வழங்கப்பட்டது.[2]

வாழ்க்கை வரலாறு[தொகு]

திசம்பர் 9, 1960 அன்று அர்னே ஒலாவ் புரூன்ட்லாண்டை மணந்தார். மனிதநேயமிக்க குடும்பமான இவர்களுக்கு நான்கு மக்கள் உள்ளனர். பிரான்சு|தென் பிரான்சில் இவர்களுக்கு ஓர் வீடு உள்ளது. குரோ ஆர்லமிற்கு மின்சார ஒவ்வாமை உள்ளதாக அறியப்படுகிறது.[3] இவரது வாழ்க்கைப்படிகளை கணவர் புரூன்ட்லாண்ட் இரு புத்தகங்களாக எழுதியுள்ளார்.

புற்றுநோய் சிகிட்சைக் குறித்த சர்ச்சை[தொகு]

புரூன்ட்லாண்ட் 2002ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோய்க்காக உள்ளேவால் பல்கலைக்கழக மருத்துவமனையில் அறுவை சிகிட்சை மேற்கொண்டார்.[4] 2007ஆம் ஆண்டில் இதே பல்கலைக்கழகத்தில் இரு சிகிட்சைகளுக்காக நோர்வே பொதுகருவூலத்திலிருந்து கட்டணம் கட்டப்பட்டதாக 2008ஆம் ஆண்டு தெரிய வந்தது. ஆனால் முன்னதாக நோர்வே அதிகாரிகளுக்கு தனது வீட்டை பிரான்சிற்கு மாற்றியுள்ளதாக அறிவித்திருந்தமையால் நோர்வே நாட்டு சமூகப் பாதுக்காப்பு நிதியத்திலிருந்து பணம் பெற தகுதியற்றவர் என ஊடகங்களில் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து புரூன்ட்லாண்ட் தனது வீட்டை மீண்டும் நோர்வேக்கு மாற்றிக்கொண்டதுடன் மருத்துமனை கட்டணங்களையும் தாமே ஏற்பதாக அறிவித்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "UN Secretary-General Ban Ki-moon Appoints Special Envoys on Climate Change". United Nations. 2007. 2007-05-28 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2007-08-03 அன்று பார்க்கப்பட்டது.
  2. "International Leader in Environmental Issues to Receive 2008 Thomas Jefferson Foundation Medal in Architecture". University of Virginia. 15 February 2008. 9 மே 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 டிசம்பர் 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. Dalsegg, Aud (9 March 2002). "Får hodesmerter av mobilstråling" (in Norwegian). Dagbladet.no (Oslo, Norway: Dagbladet). http://en.wikipedia.org/w/index.php?title=Gro_Harlem_Brundtland&action=submit. பார்த்த நாள்: 2008-02-29. 
  4. (நோர்வே மொழி) VG.no: Betalte operasjon i 2002
  5. (நோர்வே மொழி) VG.no: Gro flytter hjem

மேற்கோள்கள்[தொகு]