உள்ளடக்கத்துக்குச் செல்

குரோம் ஆரஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரோம் ஆரஞ்சு (Chrome orange) அல்லது குரோம் சிவப்பு (chrome red) என்பது ஈயம்(II) குரோமேட்டு மற்றும் ஈயம்(II) ஆக்சைடு (மூலக்கூற்று வாய்ப்பாடுகள் முறையே, PbCrO4 மற்றும் PbO) சேர்மங்கள் இணைந்து உருவாகும் ஆரஞ்சு வண்ண நிறமியாகும். ஈயம்(II) சேர்மங்களை குரோமேட்டுடன் சேர்த்து காரக் கரைசலில் வீழ்படிவாக்குதல் மூலமாக குரோம் ஆரஞ்சு நிறமி தயாரிக்கப்படுகிறது. குரோம் மஞ்சள் உடன் லை எனப்படும் காரநீர் சேர்த்து சூடுபடுத்தியும் இதைத் தயாரிக்க முடியும். ஈயம் மற்றும் அறு இணைதிறன் குரோமியம் இரண்டையும் பெற்றிருப்பதால் குரோம் ஆரஞ்சு ஒரு நச்சுப்பொருளாகும்.

குரோம் ஆரஞ்சு

முற்காலத்தில் சாயங்களில் நிறமியாக குரோம் ஆரஞ்சு பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது ஈயம் மற்றும் அதன் சேர்மங்களை சாயத்தில் இருந்து நீக்கும் திட்டத்தால் இதைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

பிரடெரிக் இலெய்டனின், பிளாமிங் யூன் (1895) ஓவியத்தில்; குரோம் ஆரஞ்சு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Color in the Making. London, UK: Black Dog Publishing. 2013. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781907317958. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2014. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோம்_ஆரஞ்சு&oldid=3582363" இலிருந்து மீள்விக்கப்பட்டது