குரோமோடிரோபிக் அமிலம்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4,5-டை ஐதராக்சிநாப்தலீன்-2,7-டைசல்போனிக் அமிலம்[1]
| |
இனங்காட்டிகள் | |
148-25-4 | |
ChEBI | CHEBI:1751 |
ChEMBL | ChEMBL144298 |
ChemSpider | 60557 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C11323 |
| |
பண்புகள் | |
C10H8O8S2 | |
வாய்ப்பாட்டு எடை | 320.30 கி/மோல் |
காடித்தன்மை எண் (pKa) | 5.36, 15.6[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குரோமோடிரோபிக் அமிலம் (Chromotropic acid) என்பது (HO)2C10H4(SO3H)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஊடுருவும் களைக்கொல்லி 2,4-டைகுளோரோபீனாக்சியசிட்டிக் அமிலத்தின் [3] அளவை உறுதி செய்யும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. 75% கந்தக அமிலத்திலுள்ள குரோமோடிரோபிக் அமிலம் பார்மால்டிகைடுடன் வினைபுரிகிறது இவ்வினையில் 580 நானோமீட்டர் அலைநீள சிவப்பு நிறம் உருவாக குரோமோடிரோபிக் அமிலம் உதவுகிறது. இந்நிறமாற்றம் குறிப்பாக ஆல்டிகைடுகளில் மட்டும் நிகழ்கிறது. மற்ற கரிம இனங்களான கீட்டோன்கள், கார்பாக்சிலிக் அமிலங்களில் இந்நிறமாற்றம் நிகழ்வதில்லை.
பார்மால்டிகைடின் இருப்பை கண்டறிந்து உறுதி செய்ய குரோமோடிரோபிக் அமிலம் உதவுகிறது [4][5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Safety (MSDS) data
- ↑ Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
- ↑ Plant Physiology Letourneau and Krog 27 (4): 822. (1952)
- ↑ http://cool.conservation-us.org/jaic/articles/jaic33-01-004_3.html
- ↑ http://www.ijdvl.com/article.asp?issn=0378-6323;year=2004;volume=70;issue=6;spage=342;epage=344;aulast=Rao