குரோமிக் அமில மின்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பைகுரோமேட் மின்கலங்கள் இடது  - ஒற்றைத் திரவம், வலது - இரு திரவங்கள்

குரோமிக் அமில மின்கலமானது (Chromic acid cell) குரோமிக் அமிலத்தை முனைவாக்கமகற்றியாகப் பயன்படுத்தும் ஒரு முதன்மை மின்கலமாகும்.  வழக்கமாக, பொட்டாசியம் டைகுரோமேட்டு கரைசலை கந்தக அமிலம் கொண்டு அமிலத்தன்மை பெறச்செய்யும் போது குரோமிக் அமிலமானது பெறப்படுகிறது. பொட்டாசியம் டைகுரோமேட்டின் பழைய பெயர் பொட்டாசியம் பைகுரோமேட் ஆகும். இதன் காரணமாக இந்த முதன்மை மின்கலம் பைகுரோமேட்டு மின்கலம் என அழைக்கப்படுகிறது.[1] இந்த மின்கலம் தற்போதைய நிலையில் பயன்பாட்டில் இல்லையென்றாலும் கூட வரலாற்று நோக்கில் இதை அறிந்து கொள்ளலாம்.

வரலாறு[தொகு]

அமைப்பு[தொகு]

மின்கலத்தின் முதன்மை பாகங்கள்:

  • நேர்மின்வாய், துத்தநாகம்
  • மின்பகுளி, நீர்த்த கந்தக அமிலம்
  • முனைவாக்கமகற்றி, குரோமிக் அமிலம்
  • எதிர்மின்வாய், கார்பன்

இந்த மின்கலமானது இரண்டு வடிவங்களில் அமைக்கப்பட்டிருந்தது. முதல் வகையானது ஒற்றை திரவ வகையாகவும் (போக்கென்டிராப் என்பவர்  பெயரை நினைவுபடுத்தும் விதமாக), இரண்டாவது வகையானது, இரண்டு திரவ வகையாகவும் (புல்லர் என்பவரை நினைவுபடுத்தும் விதமாக) வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த இரண்டு மின்கலங்களிலும், மின்கலத்தின்  மின்னழுத்தமானது 2 வோல்ட்டுகள் வரை மட்டுமேயாகும்.

போக்கென்டிராப் மின்கலம்[தொகு]

மின்கலமானது இரண்டு கார்பன் தகடுகளுக்கு இடையில் ஒரு துத்தநாகத் தகடு கொண்ட ஒரு நீண்ட கழுத்தையுடைய கண்ணாடி பாட்டிலில் அமைக்கப்பட்டது. மின்னாற்பகுப்பு மற்றும் டிஸ்போலரைசர் கலந்திருந்தது. கலவை பயன்பாட்டில் இல்லாதபோதும் இந்த கலவையைத் துத்தநாக தகடு கலைத்துவிடும், எனவே திரவத்திலிருந்து துத்தநாகத் தகடுகளை தூக்கி, பாட்டில் கழுத்தில் வைப்பதற்கு ஒரு வழிமுறை இருந்தது.

புல்லர் மின்கலம் (Fuller cell)[தொகு]

புல்லர் மின்கலம் (Fuller cell), கண்ணாடி அல்லது பளபளப்பான மண் பாத்திரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இக்கலன் குரோமிக் அமிலக் கரைசல், கார்பன் தட்டு மற்றும் ஒரு நுண்துளைகளையுடைய மண் பானை ஆகியவற்றை உள்ளடக்கியது. நுண்ணிய துளைகளைக் கொண்ட மண் கலமானது, கந்தக அமிலம், துத்தநாகத் தண்டு, மற்றும் சிறிய அளவு பாதரசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த பாதரசம் துத்தநாகத்துடன் ஒரு இரசக்கலவையை உருவாக்கி, இந்த இடத்தில் நடக்கும் வினையின் வேகத்தைக் குறைக்கிறது. அதாவது, மின்கலமானது பயன்பாட்டில் இல்லாதபோது, துத்தநாகமானது வீணான முறையில் கரைவதைக் குறைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ayrton, W.E. and Mather, T. Practical Electricity, Cassell and Company, London, 1911, pp 185-187

வெளி இணைப்புகள்[தொகு]