குரோனாசு விண்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரோனாசு (Kronos) சனி கோளை ஆராய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள ஒரு விண்வெளித்திட்டம் ஆகும். சனி கிரகச் சுற்றுச்சூழலின் வேதியியல் இயைபு, ஈர்ப்பு விசை, காந்தப்புலங்கள் ஆகியனவற்றை விரிவாக ஆராய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சூரிய சக்தியில் இயங்கும் ஏந்தூர்தி விண்கலம், இரண்டு வளிமண்டல ஆய்வுகலங்கள், சனியின் வளையங்களை நெருக்கமாக படம்பிடிக்க ஏதுவாக இரண்டு சிறிய புறவெளி ஆய்வுகலங்கள் முதலானவை இத்திட்டத்திற்கான பரிந்துரையில் இடம்பெற்றிருந்தன. மோதிரங்கள் நெருக்கமான இமேஜிங் (சாத்தியமான) இரண்டு சிறிய ஆய்வுகள் கொண்டுள்ளது. குரோனஸை நாசா, மேலும் இது ESA இடையே ஒத்துழைப்பு ஒரு பகுதியாக முன்மொழியப்பட்டது. நாசாவிற்கும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக குரோனாசு விண்வெளித்திட்டம் திட்டமிடப்பட்டது[1] .

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு விண்கலம் ஏவப்பட்ட பிறகு அது வெள்ளி, பூமி மற்றும் வியாழன் கோள்களை பல பயணங்களில் நெருங்கி ஆய்வு செய்த பின்னர் குரோனாசு விண்கல் சனியைச் சென்றடையும். சனியைச் சென்றடைய இவ்விண்கலம் எடுத்துக் கொள்ளும் நேரம், திட்டத்திற்காக தேர்வு செய்யப்படும் பாதையைப் பொறுத்து 6 முதல் 17 ஆண்டுகளாக இருக்கும். Iசனியின் சுற்றுச்சூழலுக்குள் சென்றதும் வளிமண்டல ஆய்வுக்கென அனுப்பப்பட்ட இரண்டு புறவெளி ஆய்வுக் கலங்களும் அங்கு விடுவிக்கப்படும். அங்குள்ள வளிமண்டலத்தின் வேதியியல் இயைபு, வெப்பநிலை, காற்றின் வேகம், 10 பார் அழுத்தத்திற்குக் கீழ் மேகங்களின் கட்டமைப்பு முதலியவற்ரை இவ்விண்கலங்கள் ஆய்வு செய்யும். வளையங்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள விண்கலங்கள் இரண்டும் வளையங்களுக்கு நெருக்கமாகச் சென்றவுடன் அங்கு விடுவிக்கப்படும். இவை வளையங்களை நெருக்கமாகப் படம் எடுத்து அனுப்பும் பணியைத் தொடரும்[1].

சனி கோளுக்கு மிகநெருக்கமாகப் பறந்து செல்வதன்மூலம் ஏந்தூர்தி விண்கலம் சனியின் வளிமண்டலம், சனியின் ஈர்ப்பு இத்துடன் காந்தப் புலன்கள் முதலானவற்றை துல்லியமாக ஆராய்ந்து தகவல்களை அளிக்கும் எனக் கருதப்படுகிறது. வியாழன் கோளின் யூனோ சுற்றுப்பாதை விண்கலத்தை ஒத்த வடிவமைப்பில் சூரியப் பலகங்கள் உட்பட சனி கோளுக்கான ஏவூர்தி விண்கலமும் வடிவமைக்கப்பட்டது. இதற்குப் பின்னர் வடிவமைக்கப்பட்ட விண்கலங்களும் கலீலியோவின் சுற்றுச்சூழல் நுழைவு விண்கலனின் வடிவமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டன. இத்திட்டம் தற்பொழுது நடைமுறையில் உள்ள விண்வெளி தொழிநுட்பவியல் நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்டது ஆகும்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Marty, B.; Guillot, T.; Coustenis, A. (2009). Experimental Astronomy 23 (3): 947–976. doi:10.1007/s10686-008-9094-9. Bibcode: 2009ExA....23..977M. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோனாசு_விண்கலம்&oldid=2748181" இலிருந்து மீள்விக்கப்பட்டது