குரோதி ஆண்டு
குரோதி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்தெட்டாம் ஆண்டாகும்.[1] இந்த ஆண்டை செந்தமிழில் பகைக்கேடு என்றும் குறிப்பர்.
குரோதி ஆண்டு வெண்பா
[தொகு]குரோதி ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் அறுபது வருட வெண்பாவில்
கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க
அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே
சொற்பவிளையுண்டெனவே சொல்
இந்தப் பாடலின்படி இந்த ஆண்டில், அதாவது குரோதி ஆண்டில் மக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கள்வர்களாலும், எதிரிகளாலும் மிகுந்த தொந்தரவு ஏற்படலாம், அதனால் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருந்து அவற்றைத் தவிர்க்கவேண்டும். தேவைப்படும் சமயத்தில் மழைப் பொழிவு குறைவாக இருக்கும். இதனால் காய்கறி பற்றாக்குறை ஏற்படும், பயிற்களின் விளைச்சல் குறையக்கூடும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "குரோதி". பொருள். விக்சனரி. பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்ரல் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "குரோதி வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பொதுப்பலன் @ 14.04.2024 முதல் 13.04.2025 வரை". இந்து தமிழ் திசை. பார்க்கப்பட்ட நாள் 2024-04-12.