குரூசு தேவாலயம்
| குரூசு தேவாலயம் | |
|---|---|
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | யாழ்ப்பாணக் கோட்டை |
| புவியியல் ஆள்கூறுகள் | 9°39′44″N 80°00′33″E / 9.662257°N 80.009171°E |
| சமயம் | டச்சு சீர்திருத்தச் சபை |
| நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1755 |
| செயற்பாட்டு நிலை | இடித்துத் தள்ளப்பட்டது |
| இணையத் தளம் | www |
குரூசு தேவாலயம் (Kruys Church) என்பது இலங்கையில் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் அமைந்திருந்த பழமையான கிறித்தவ தேவாலயம் ஆகும். இது 1706ஆம் ஆண்டு ஒல்லாந்தரால் கட்டப்பட்டது. இலங்கையின் மிகப் பழமையான சீர்திருத்தக் கிறித்தவ ஆலயங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது.[1]
வரலாறு
[தொகு]இந்த ஆலயம் சமச்சிலுவை வடிவில் கட்டப்பட்டது. யாழ்ப்பாணப்பட்டினத்தின் ஒல்லாந்த ஆட்சியாளர் ஆதம் வான் டெர் டுய்ன் காலத்தில் இது உருவாக்கப்பட்டது. இதன் வடிவமைப்பாளராக மார்ட்டினுஸ் லூசேகம் பணியாற்றினார். அக்காலத்தில் பிலிப்புஸ் டி வ்ரீஸ் என்பவர் ஆலயப் போதகராக இருந்தார்.[2] 1795 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றபின், இந்த ஆலயம் படையினரின் வழிபாட்டு இடமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் புதிய ஆலயங்கள் உருவானதால் இது கைவிடப்பட்டது.இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு யாழ்ப்பாணக் கோட்டையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில், இந்த ஆலயம் மற்றும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. தற்போது சுவர்களின் எச்சங்கள் மட்டுமே காணப்படுகின்றன. சில பழமையான கல்லறைக் கற்கள் பாதுகாப்பிற்காக மட்டக்களப்பிலுள்ள ஆலயத்திற்கு மாற்றப்பட்டன.[3][4][5]
கட்டிட அமைப்பு
[தொகு]

குரூஸ் தேவாலயம் சமச்சிலுவை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. சிலுவையின் நான்கு கரங்களும் ஒரே நீளத்தில் அமைந்திருந்தன; நடுப்பகுதி விசாலமாக இருந்தது.சுவர்கள் நான்கு முதல் ஐந்து அடி தடிமனுடன் கற்கள் மற்றும் பவளக்கற்கள் கொண்டு கட்டப்பட்டு, மேலே சுண்ணாம்பு பூச்சு பூசப்பட்டிருந்தது. கதவுகளின் தூண்கள், வளைவுகள் மற்றும் மேல்தள அலங்காரங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒல்லாந்தச் செங்கற்களால் உருவாக்கப்பட்டிருந்தன.தரைப்பகுதி இரண்டு சதுர அடி அளவுடைய கற்களால் பதிக்கப்பட்டிருந்தது. அதில் 1660 ஆம் ஆண்டைச் சேர்ந்த பல கல்லறைக் கற்களும் காணப்பட்டன. அவை மீண்டும் அடக்கம் செய்யப்பட்ட மனித எச்சங்கள் அல்லது சாம்பலை கொண்டிருந்ததாக கருதப்படுகிறது.ஆலயத்தின் நீளப்பகுதிகளின் முடிவுகள் முக்கோண முகப்புடன் அமைந்திருந்தன. சாளரங்களில் பல சிறு கண்ணாடித் தகடுகள் பொருத்தப்பட்டிருந்தன; அவை தடித்த குறுக்குக் கட்டுகளால் பிரிக்கப்பட்டிருந்தன.இந்த ஆலயத்தில் சுமார் 600 பேர் வரை ஒன்றுகூடி வழிபட முடிந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Historic Buildings of the Dutch Reformed Church - The Kruys Church at Jaffna". Wolvendaal Foundation. Retrieved 15 May 2017.
- ↑ de Silva, R. Rajpal Kumar (1988). Illustrations and Views of Dutch Ceylon 1602-1796: A Comprehensive Work of Pictorial Reference With Selected Eye-Witness Accounts. Brill Archive. pp. 310–312. ISBN 9789004089792.
- ↑ "Reconstruct not desecrate Jaffna landmarks". The Island. 25 November 2011. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=39803.
- ↑ Kavan Ratnatunga (19 October 2014). "On the Yal Devi to Yalpanam". Sunday Times. http://www.sundaytimes.lk/141019/plus/on-the-yal-devi-to-yalpanam-122717.html.
- ↑ Sadanandan, Renuka. "Another look at Jaffna". Sunday Times. http://www.sundaytimes.lk/030817/plus/6.html.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- The Kruys Kerk of Jaffnapatam: (the Church in the Dutch Fort, Jaffna, Ceylon). Jaffna Christian Union. 1967.
- General Consistory - Dutch Reformed Church in Sri Lanka; Franciscus, S. Douglas (Ed) (1983). Faith of our Fathers: History of the Dutch Reformed Church in Sri Lanka (Ceylon). Pragna Publishers.
- Lewcock, Ronald; Sansoni, Barbara; Senanayake, Laki (2010). The Architecture of an Island - The Living Heritage of Sri Lanka. Barefoot. ISBN 9559466003.