குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தோற்றம்
கல்லூரி நுழைவாயில் | |
| குறிக்கோளுரை | கற்றல் இயற்கையான திறமையை ஊக்குவிக்கிறது. |
|---|---|
| உருவாக்கம் | 16 சூலை 2019 |
| தலைவர் | க.விமல்சந்த் ஜபக் |
| முதல்வர் | கெ.அர்ஜுனன் |
| அமைவிடம் | , , 12°35′16″N 80°08′00″E / 12.5878062°N 80.1333492°E |
| சேர்ப்பு | சென்னைப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக்குழு |
| இணையதளம் | www |
குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Guru Shree Santhivijai Jain Arts and Science College) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓர் இருபாலர் பயிலும் கல்லூரி ஆகும். இக்கல்லூரி திருக்கழுக்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சியில் மனமை கிராமத்தில் அமைந்துள்ளது.[1]
வரலாறு
[தொகு]குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இருபாலர் பயிலும் இக்கல்லூரியை திருக்கழுக்குன்றம் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய அறக்கட்டளை நிர்வகிக்கிறது. தமிழ்நாடு அரசு அரசு ஆணை எண் 389/ 1997 என்ற கடிதத்தில் கல்லூரிக்கான ஒப்புதலை அளித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்படும் இக்கல்லூரிக்கு புது தில்லியிலுள்ள பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரமம் வழங்கியுள்ளது.
துறைகள்
[தொகு]- கணினி பயன்பாடு
- ஆங்கிலம்
- கணினி அறிவியல்
- வணிகவியல்
பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்
[தொகு]இளநிலை
[தொகு]- கணினி பயன்பாடு
- ஆங்கிலம்
- கணினி அறிவியல்
- வணிகவியல்