குரு வம்ச மன்னர்களின் பட்டியல்
{{Infobox former monarchy | border = royal | royal_title = மன்னர் | realm = குரு இராச்சியம் | first_monarch =முதலாம் விதுரதன் (மன்னர் புருவின் மகன்

குரு வம்ச மன்னர்களின் பட்டியல் (List of Kuru kings), பரத கண்டத்தின் அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரஸ்தம் தலைநகரங்களாகக்[1] கொண்ட குரு நாட்டின் ஆட்சியாளர்கள் ஏறத்தாழ கிமு 1,200 முதல் கிமு 350 வரை ஆட்சி செய்தனர்.[2]குரு வம்ச மன்னர்கள் சந்திர குலத்தினர் எனினும், மன்னர் மன்னர் குரு வழித்தோன்றல்கள் என்பதால் இவர்களை குரு வம்சத்தினர் என்றும் அழைப்பர். மன்னர் யயாதி-சர்மிஷ்டை தம்பதியரின் இளைய மகன் புருவின் வழித்தோன்றல்களை குரு வம்சத்தினர் ஆவார்.
புருவின் முன்னோர்களாக புரூரவன், நகுஷன், யயாதி உள்ளிட்டோர் சந்திர குலத்தினர் ஆவார். புருவின் மூத்த சகோதரன் யதுவின் வழித்தோன்றல்கள் யாதவ குலத்தினர் ஆவார். குரு வம்ச மன்னர்களின் வரலாறு குறித்து மகாபாரதம் விரிவாகக் கூறுகிறது.[3]
குரு குல மன்னர்களின் முக்கியமான அரசர்கள் குரு, பிரதீபன், சந்தனு, பீஷ்மர், திருதராட்டிரன், பாண்டு, விதுரன், பாண்டவர், கௌரவர், பரிட்சித்து மற்றும் ஜனமேஜயன் ஆவர். குரு குல மன்னர்கள் கங்கை ஆற்றிக்கும், யமுனை ஆற்றிக்கும் இடைப்பட்ட வளமான பகுதிகளை ஆண்டனர். பின்னர் குரு நாடு, குருஜாங்காலம் மற்றும் உத்தரகுரு என மூன்று நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. குரு நாட்டிற்கு மேற்கில் குருஜாங்காலம் மற்றும் கிழக்கில் உத்தரகுரு நாடுகள் இருந்தன[4].
குருச்சேத்திரப் போர்
[தொகு]குரு குலத்தினரில் பாண்டவர்கள் தாங்கள் சூதாடி தோற்ற நாட்டின் உரிமை கோரி கௌரவர்களுடன் குருச்சேத்திரத்தில் போரிட்டனர்.[5]இவ்விருவருக்கும் ஆதாரவாக பரத கண்டத்து நாடுகளின் மன்னர்கள் படைகளுடன் போரிட்டனர். குருச்சேத்திரப் போரின் முடிவில் எஞ்சியவர்கள் குரு குலத்தினரில்]] பாண்டவர் ஐவர், [[யது குலம்|யாதவ குலத்தினரில் சாத்தியகி மற்றும் கிருதவர்மன் மற்றும் அந்தணர்களில் கிருபர், அசுவத்தாமன்,மட்டுமே. மற்ற அனைவரும் மாண்டனர்.
தோற்றம்
[தொகு]குரு குலத்தவர்களின் முன்னோர்கள்
[தொகு]குரு வம்ச மன்னர்கள் பட்டியல்
[தொகு]- குரு
- பிரதீபன்
- சாந்தனு
- பாக்லீகர்
- சோமதத்தன்
- பீஷ்மர்
- சித்திராங்கதன்
- விசித்திரவீரியன்
- திருதராட்டிரன்
- பாண்டு
- கௌரவர்
- பாண்டவர்
- பரிட்சித்து
- ஜனமேஜயன்
பாண்டவர் குடும்பத்தினர்
[தொகு]மன்னர் பாண்டு-குந்தி தம்பதியருக்கு பிறந்தவர்கள் தருமன், வீமன், அருச்சுனன் ஆவர். பாண்டு-மாதுரி தம்பதியருக்கு பிறந்தவர்கள் நகுலன் மற்றும் சகாதேவன் ஆவார். பாண்டுவின் இவ்வைந்து மகன்களை பாண்டவர் ஆவர்.[6][7]
பாண்டவர்-திரௌபதி தம்பதியர்களுக்கு பிறந்த மகன்களை உபபாண்டவர்கள் என அழைப்பர்[8].
- பிரதிவிந்தியன் - தருமன்-திரௌபதிக்கும் பிறந்தவன்
- சுதசோமன்- வீமன்-திரௌபதிக்கும் பிறந்தவன்
- சுருதகீர்த்தி - அருச்சுனன்-திரௌபதிக்கும் பிறந்தவன்
- சதாநீகன் - நகுலன்-திரௌபதிக்கும் பிறந்தவன்
- சுருதகர்மன் - சகாதேவன்-திரௌபதிக்கும் பிறந்தவன்
மேலும் பாண்டவர்களுக்கும் திரௌபதி அல்லாத வேறு மனைவிகளுக்கு பிறந்தவர்கள் வருமாறு:
- யவ்தேயன் - தருமன்- தேவிகாவுக்குப் பிறந்தவர்.
- கடோற்கஜன் - பீமன்- இடும்பிக்குப் பிறந்தவர்
- அபிமன்யு -- அருச்சுனன்-சுபத்திரைக்கு பிறந்தவர்.
- பாப்புருவாகனன் - அருச்சுனன்- சித்திராங்கதைக்கு பிறந்தவர்.
- அரவான் --அருச்சுனன்-உலுப்பிக்கு பிறந்தவர்.
- நிறமித்திரன் - நகுலன்-கரேனுமதிக்கு பிறந்தவர்
- சுகோத்திரன் - சகாதேவன்-விஜயாவுக்கு பிறந்தவர்.
கௌரவர் குடும்பத்தினர்
[தொகு]திருதராட்டிரன்-காந்தாரி தம்பதியருக்கு 100 மகன்கள் பிறந்தனர். நூற்றுவர்களில் மூத்தவன் துரியோதனன், இரண்டாமவன் துச்சாதனன். திருதராட்டிரனின் மகள் துச்சலை. துரியோதனனின் மகன் இலக்குமண குமாரன்
தலைமுறை அட்டவணை
[தொகு]இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uttar Pradesh - History". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 2019-12-16.
- ↑ B. Kölver, ed. (1997). Recht, Staat und Verwaltung im klassischen Indien [Law, State and Administration in Classical India] (in ஜெர்மன்). München: R. Oldenbourg. pp. 27–52.
- ↑ "Mahabharata". Collins English Dictionary (13th ed.). HarperCollins. 2018. ISBN 978-0-008-28437-4.
- ↑ Raychaudhuri 1953, ப. 21-23.
- ↑ Narayan, R. K. (2001-03-01). The Mahabharata (in ஆங்கிலம்). Penguin Books Limited. ISBN 978-0-14-119081-5.
- ↑ Bonnefoy, Yves. Asian Mythologies. translated under the direction of Wendy Doniger. Chicago and London: The University of Chicago Press. 1993. pp. 180–183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-06456-5
- ↑ van Buitenen, J.A.B., ed. (1981). The Mahābhārata. Translated by van Buitenen (Phoenix ed.). Chicago: University of Chicago Press. ISBN 9780226846644.
- ↑ Menon, Ramesh (2006). The Mahabharata : a modern rendering. New York: iUniverse, Inc. ISBN 9780595401888.
ஆதாரங்கள்
[தொகு]- Pletcher, Kenneth (2010). The History of India. The Rosen Publishing Group. ISBN 9781615301225.
- Raychaudhuri, Hemchandra (1953). Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of Gupta Dynasty. University of Calcutta.