குரு ஜம்பேசுவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 29°06′N 75°27′E / 29.10°N 75.45°E / 29.10; 75.45
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரு ஜம்பேசுவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்1995
வேந்தர்ஜகநாத் பஹடியா[1]
துணை வேந்தர்எம். எல். ரங்கா
அமைவிடம்,
29°06′N 75°27′E / 29.10°N 75.45°E / 29.10; 75.45
வளாகம்372 ஏக்கர்[2]
சேர்ப்புயுஜிசி
இணையதளம்www.gjust.ac.in

குரு ஜம்பஷ்வர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Guru Jambheshwar University of Science and Technology) 1995 ஆம் ஆண்டு அரியானா மாநிலத்தின், ஹிசார் மாவட்டத்தில் நிறுவப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் மற்றும் மேலாண்மை போன்ற படிப்புகளை அளிக்கின்றது.

வரலாறு[தொகு]

இது அதிகாரப்பூர்வமாக நவம்பர் 1, 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. குரு ஜம்பஷ்வர் ஜி மஹராஜ் என்பவர் பெயரை இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இவர் 15 ஆம் நூற்றாண்டின் சுற்றுச்சூழலியலாளர் ஆவார். இது அரியானா மாநிலத்தின் முதன்மைப் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது.

அமைவிடம்[தொகு]

ஏறத்தாழ 372 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சாலை, பைப் லைன், மின் அளிப்பு மற்றும் வாகனம் நிறுத்துமிடம் போன்ற நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. ஊழியர்க்கான தங்கும் விடுதி கட்டுமான பணி நடைபெறுகிறது. இந்த வளாகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தானியங்கி இயந்திரமும் தபால் அலுவலகமும் அமைந்துள்ளன.

நூலகம்[தொகு]

நூலகக் கட்டிடம் 55,833 சதுர அடியில் அமைந்துள்ளது. படிப்பதற்காக 250 அமர்வுகளைக் கொண்ட இரண்டு அறைகள் உள்ளன. தற்போது 70,860க்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

  1. "Chancellor". Guru Jambheshwar University of Science and Technology. Archived from the original on 2010-09-23. பார்க்கப்பட்ட நாள் 2010-09-04.
  2. "About". Guru Jambheshwar University of Science and Technology. Archived from the original on 2010-09-18. பார்க்கப்பட்ட நாள் 2010-09-04.