குரு கோவிந்த சிங் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
குரு கோவிந்த சிங் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Guru Gobind Singh Refinery), இந்துஸ்தான் பெட்ரோலியம்-மித்தல் எரிசக்தி நிறுவனம் இணைந்து நடத்தும் பாறைநெய் தூய்விப்பாலை ஆகும்.[1]. இது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பட்டிண்டா மாவட்டத்தின் தலைமையிடமான பட்டிண்டா நகரத்தில் அமைந்துள்ளது.இவ்வாலையை நிறுவுவதற்காக செலவு $4 பில்லியன் அமெரிக்க டாலாகும்.[2]
இப்பாறைநெய் தூய்விப்பாலை 2008ஆம் நிறுவப்பட்டாலும், மார்ச் 2012ஆம் ஆண்டு முதல் முழு வீச்சுடன் செயல்படத் துவங்கியது.[3] இவ்வாலை ஆண்டிற்கு 11.3 மில்லியன் டன் (நாள் ஒன்றுக்கு 230,000 பீப்பாய்கள்) பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.[4] இவ்வாலை சுத்திகரிக்க தேவையான பாறை எண்ணெய்யை குஜராத் மாநிலத்தின் முந்திரா துறைமுகத்திலிருந்து பெறுகிறது.[3]
பெட்ரோலியப் பொருட்கள்
[தொகு]இவ்வாலை பாறை எண்ணெய்யிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு, நெய்தை, கற்கரி, எரிநெய், நேப்தா, அசுபால்ட்டு, கந்தகம், வானூர்தி எரிபொருள், எரிநெய் (fuel oil), மசகுநெய் (Lubricant Oil) செயற்கை உரங்கள், பென்சீன்., தார், மெழுகு, மற்றும் எக்சேன், நெகிழி தயாரிக்க தேவையான பாலிஎத்திலீன் போன்ற பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கிறது
இதனையும் காண்க
[தொகு]- இந்துஸ்தான் பெட்ரோலியம்-மித்தல் எரிசக்தி நிறுவனம்
- பாறைநெய் தூய்விப்பாலை
- இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் பட்டியல்
- இந்துஸ்தான் பெட்ரோலியம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PPAC Refinery Map as on 01.04.2020" (PDF). Archived from the original (PDF) on 20 June 2021.
- ↑ "Lakshmi N Mittal aids India, Pakistan detente with refinery - The Economic Times". economictimes.indiatimes.com. Retrieved 2016-06-26.
- ↑ 3.0 3.1 "Bathinda refinery gets in operation". timesofindia.indiatimes.com. Retrieved 2016-06-26.
- ↑ "Guru Gobind Singh Refinery (GGSR), Punjab - Hydrocarbons Technology". hydrocarbons-technology.com. Retrieved 2016-06-26.
வெளி இணைப்புகள்
[தொகு]- HPCL-Mittal Energy Ltd பரணிடப்பட்டது 1 நவம்பர் 2020 at the வந்தவழி இயந்திரம்