குரு குஞ்சு குறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குரு குஞ்சு குருப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குரு குஞ்சு குறுப்பு (Guru Kunchu Kurup, 1881-1970) கேரளாவின் தென்பகுதியில் பிறந்த மிகவும் பிரபலமான கதகளி கலைஞர்களில் ஒருவர். மேலும் ஒவர் மத்திய மற்றும் வடக்கு கேரளாவிலும் புகழ் பெற்றார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இன்றைய ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாட்டின் தகழி என்ற கிராமத்தைச் சேர்ந்த போய்பள்ளில்குளம் குடும்பத்தில் பிறந்த குறுப்பு13 வயதில் தனது சொந்த மாமாக்கள் கொச்சப்பி பனிக்கர் மற்றும் இராம பனிக்கர் ஆகியோரிடமிருந்து கதகளியில் பயிறி மேற்கொள்ளத் தொடங்கினார். பின்னர் இவர் புகழ்பெற்ற மாத்தூர் குஞ்ஞு பிள்ளை பனிக்கரின் புகழ்பெற்ற களியோகத்தில் (நிறுவனம்) சேர்ந்தார். பின்னர் குருக்களான சம்பாகுளம் சங்கர பிள்ளை, தோட்டம் சங்கரன் நம்பூதிரி ஆகியோரின் கீழ் பயிற்சி பெற்றார். பின்னர் வெச்சூர் அய்யப்ப குறுப்பின் கீழ் இவரது சீர்ப்படுத்தல் கொச்சி மற்றும் மலபார் பிரந்தியங்களில் நுழைவதற்கு வழி வகுத்தது.

குரு[தொகு]

1910 ஆம் ஆண்டில் பாலக்காடு அருகே வசித்த கதகளி அதிபரான பலயில் கருணாகர மேனனின் உறவினருடன் குஞ்சு குருப்பின் திருமணம் மத்திய கேரளாவுடனான இவரது உறவை உறுதிப்படுத்தியது. விரைவில், புகழ்பெற்ற கேரள கலாமண்டலத்தில் அதன் இணை நிறுவனர், கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனனின் அழைப்பைத் தொடர்ந்து இவர் ஒரு ஆசிரியராக அதில் சேர்ந்தார். பின்னர் இவர் பெங்களூரிலும் (1943) சென்னையிலும் கதகளி குருவாக சில காலம் இருந்தார். 1914 இல், மிருணாளினி சாராபாய் இவரது மாணவராக இருந்தார். பின்னர் (1948–52) தனது சொந்த பிரதேசமான அம்பலப்புழாவிலுள்ள செம்பகாசேரி நடன கலாமண்டலத்தில் சிலகால்ம் இருந்தார்.

வேடங்கள்[தொகு]

1971 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது பெற்ற [1] இவர், சரியாக ஒரு முன்மாதிரியான ஆசிரியர் அல்ல, என்றாலும் இவருக்கு ஒரு நடிகராக நிறைய ரசிகர்கள் இருந்தனர். மேலும் அவர்கள் சிறந்த கலாமண்டலம் கிருட்டிணன் நாயரையும் சேர்த்துக் கொண்டனர். ரசம், பாவம் ,அபிநயம் ஆகியவற்றின் அற்புதமான விளக்கக்காட்சியின் மூலம் கதகளி நடிப்பு-நடனத்தின் புதிய அழகியலைஉருவாக்குவதில் இவர் வெற்றி பெற்றார்.நளன், அன்னம், ருக்மாங்கதன், அருச்சுனன், கிருட்டிணன் போன்ற புகழ்பெற்ற நாயர்களாகவும், குசேலன், பிராமணன், சுந்தர பிராமணன் போன்ற சிறு வேடங்கள் உட்பட மாறுபட்ட பாத்திரங்களுக்காக புகழ் பெற்றார். கருப்பு தாடி கட்டாள் உட்பட, இராவணன், கீசகன் போன்ற எதிர் நாயகன் வேடங்களிலும் இவர் சிறந்து விளங்கினார்.

விருதுகள்[தொகு]

தென்னிந்திய மாநிலத்திலிருந்து நான்கு நூற்றாண்டு பழமையான பாரம்பரிய நடன-நாடகமான கதகளிக்கு தனித்துவமான பங்களிப்பு செய்ததற்காக 1956 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். [2] 1965இல் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதினை வங்கியது. 1969 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற கௌரவத்தையும் வென்றார்.

இவர் மலையாள எழுத்தாளரும், ஞான்பீட விருது வெற்றியாளருமான தகழி சிவசங்கரப் பிள்ளையின் தந்தைவழி மாமாவாக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  2. "SNA Awardees' List". Sangeet Natak Akademi. 2016. Archived from the original on 31 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_குஞ்சு_குறுப்பு&oldid=3895795" இலிருந்து மீள்விக்கப்பட்டது