குருவில ஜேக்கப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குருவில ஜேக்கப்
பிறப்புAymanam

குன்னன்கேரல் குருவில ஜேக்கப் (Kunnenkeril Kuruvila Jacob) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார்.[1] இவர் 1904 ஆகத்து 3 அன்று கோட்டையம் மாவட்டத்தில், அய்மனம் என்னும் சிற்றூரில் பிறந்தவர், கோட்டையம், திருவனந்தபுரம், நாகர்கோயில், பாரூர் போன்ற பல இடங்களில் கல்வி பயின்றார். இவர் தன் உயர்கல்வியை லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[2] இவர்  சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முதல் இந்தியத் தலைமையாசிரியராக 1931ஆம் ஆண்டில் தனது 27 வயதில் பொறுப்பேற்று, 1962இல் ஓய்வுபெறும் வரை பணியாற்றினார்.[3][4] ஓய்வுபெற்ற பிறகு,  ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத் பொதுப் பள்ளியில் ஏழு ஆண்டுகளும், பின்னர் மகாராட்டிரத்தில் உள்ள பம்பாய் கதீட்ரல் அண்டு ஜான் கேனன் ஆகிய பள்ளிகளின் முதல்வராகவும் பணியாற்றினார். இவர் 1991 ஆகத்து 25 அன்று இறந்தார்.[5] இவர் முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்தில் இவர் பணிபுரிந்த பள்ளிகள் அனைத்தும் பின்தங்கிய நிலையிலே இருந்தன. பின்னர்த் தன்னுடைய தொலைநோக்குப் பார்வையாலும் சமூக அக்கறையாலும் அவற்றை முன்மாதிரிப் பள்ளிகளாக வளர்த்தெடுத்தார்.[6] இவரது பணிகளைப் பாராட்டும் விதமாக இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருது 1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[7] ஜோக்கப்பின் முன்னாள் மாணவர்கள் அவரை நினைவுகூரும் வகையில் பள்ளிக் கல்வியை ஆகச்சிறந்த முறையில் மேம்படுத்தும் முனைப்போடு இவரது பெயரில் குருவில ஜேக்கப் முயற்சிகள் (Kuruvila Jacob Initiative) என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Muthaiah S. (2011). Madras Miscellany. Westland. பக். 1212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789380032849. https://books.google.ae/books?id=QHtZG8beGy4C&pg=PT267&lpg=PT267&dq=Kunnenkeril+Kuruvila+Jacob&source=bl&ots=GlicFLTiR7&sig=BYAO34c2oLWMeSOObD3bJ89xAQ4&hl=en&sa=X&ei=BkCgVNmbK8nxapvzgBg&redir_esc=y#v=onepage&q=Kunnenkeril%20Kuruvila%20Jacob&f=false. 
  2. "The Man". Kuruvila Jacob (2014). பார்த்த நாள் December 28, 2014.
  3. "MCC". Kuriuvila Jacob (2014). பார்த்த நாள் December 28, 2014.
  4. "IITM". IITM (2014). பார்த்த நாள் December 28, 2014.
  5. "Later Years". Kuruvila Jacob (2014). பார்த்த நாள் December 28, 2014.
  6. ம.சுசித்ரா (2018 ஆகத்து 14). "ஆசிரியர்க்கெல்லாம் தலைமகன்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 15 ஆகத்து 2018.
  7. "Padma Awards". Padma Awards (2014). மூல முகவரியிலிருந்து November 15, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் November 11, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவில_ஜேக்கப்&oldid=2962388" இருந்து மீள்விக்கப்பட்டது