குருவாயூர் தேவசுவம் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருவாயூர் தேவசுவம் அருங்காட்சியகம் (Devaswom Museum) என்பது கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இதில் குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் அரிய பொருட்களைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கோயில் பொருட்கள், பழங்கால பொருட்கள், இசைக்கருவிகள், சுவரோவியங்கள், கிருஷ்ணநாட்டம் மற்றும் கதகளி போன்ற நாட்டுப்புறக் கலைகளில் பயன்படுத்தப்படும் அலங்காரங்கள், குருவாயூர் கேசவனின் (யானை) பற்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Museum". Guruvayur Devaswom. 2015-04-02 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Devaswom Museum". Holidayiq.com. 2015-04-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-02 அன்று பார்க்கப்பட்டது.