குருவராஜபேட்டை (மையம்) தொடக்கப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குருவராஜபேட்டை (மையம்) தொடக்கப் பள்ளி

குருவராஜபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மையம்) காவேரிப்பாக்கம் ஒன்றியம் வேலூர்மாவட்டத்திற்குட்பட்ட அரக்கோணம் தாலூக்காவிலுள்ளது. அரக்கோணம் சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில்அமைந்துள்ள சாலை என்ற ஊரிலிருந்து திருத்தணி மார்க்த்தில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பள்ளியின் வரலாறு[தொகு]

குருவராஜபேட்டை தொடக்கப் பள்ளி 1908 ஆம் ஆண்டு பிள்ளையார் கோவிலில் துவக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்தாகவே திண்ணைப் பள்ளியாக செயல்பட்டு வந்துள்ளது.1934 ஆம் ஆண்டு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் அங்கீகார எண் 2634 நாள் 14.10.1934 அனுமதியின்படி குருவராஜபேட்டை தொடகக்கப் பள்ளி செயல்பட்டுவருகின்றது. 1961 இல் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வமயம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை இருந்துள்ளன, அந்நேரத்தில் 1000 மாணவர்களும் 23 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். உயர் நிலைப் பள்ளியாகதரம் உயத்தப்பட்டதால் போதிய இடவசதி இன்மையினால் இப்பள்ளி குருவராஜபேட்டை மையம் எனவும், குருவராஜபேட்டை கிழக்கு , மேற்கு, வடக்கு என மூன்று பள்ளிகளாக பிரிக்கப்பட்டு தற்பொழுது செயல்பட்டுவருகின்றது.

பள்ளியின் சிறப்புகள்[தொகு]

1998 ல் கற்றலில் மாதிரிபள்ளியாக பொலிவு பெற்றுள்ளது.9 நபர்கள்கொண்ட கல்விக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி சீரமைப்பு மாநாட்டிற்கு ரூ 26000 வழங்கி பள்ளி முன்னேற்றத்தில் பங்கேற்றுள்ளது. இப்பள்ளி துவங்கப்பட்டதால் 2007 வரை 90.1 சதவீத மக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இப்பள்ளியில் பயின்றவர்களில் 2007 நிலவரப்படி 75 மருத்துவர்களும் , எண்ணற்ற பிற துறைவல்லுநர்களும் உருவாகியுள்ளனர். நூற்றாண்டு கண்டபிறகும் தற்போது 200 க்கும் மேற்பட்டமாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்றமாணவர் திரு .குப்புசாமி அவர்கள் கல்வித் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருகின்றார்.

முன்னோடிகள்[தொகு]

தமிழ்வளர்த்த சான்றோரான தமிழறிஞர் மங்கலங்கிழார் அப்பகுதி மக்களுக்கு கல்வி அறிவு அளிப்பதில் பெரும் பங்காற்றியுள்ளார். பலதமிழறிஞர்கள் அவர்களின் வழித்தோன்றர்களே. அவரின் நினைவாக அப்பகுதியில் அமைந்துள்ள மேனிலைப் பள்ளிக்கு மங்கலங்கிழார் மேனிலைப் பள்ளி என பெயரிட்டுள்ளனர்.

நூற்றாண்டுவிழா[தொகு]

பள்ளிதுவங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்ததையடுத்து 2008 ஆம் வருடம் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  • வேலூர் மாவட்டதொடக்கக் கல்வி அலுவலரின் அங்கீகார எண் 2634 நாள் 14.10.1934
  • பள்ளி நூற்றாண்டுவிழா அறிக்கை நாள் 8.12.2008