குரும்பேரா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரும்பேரா கோட்டை (ஆங்கிலம் :Kurumbera Fort) ககனேஷ்வர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது கேஷியரிக்கு தென்கிழக்கில், அந்த நகரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில்உள்ளது. இந்த கோட்டையில் சிறிய குடியிருப்புகளும் கோயில்களும் உள்ளன. இது இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.

இருப்பிடம்[தொகு]

குரும்பேரா கோட்டை பேருந்து வசதிகள் ஏதும் செய்யப்படாத ககனேஷ்வர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. ககனேஷ்வரை அடைய, கேஷியரி மாநில நெடுஞ்சாலையில், கரக்பூரிலிருந்து சுமார் 27 கி.மீ தூரத்தில் உள்ள பெல்டாவை நோக்கி இடதுபுறம் திரும்பினால், கேஷியரியில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ள குகாய் என்ற கிராம சந்திப்பை அடையலாம். அங்கிருந்து வலதுபுறம் குட்சா (மண்) சாலையாக மாறி, குக்காயிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் ககனேஷ்வர் கிராமம் உள்ளது.

இது பண்டைய நினைவுச்சின்னங்கள் சட்டத்தின் கீழ் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால்(ASI) பாதுகாக்கப்பட்ட ஒரு பழங்கால கோட்டை ஆகும். ஒரு தூண் தாழ்வாரத்தால் வளையப்பட்ட பெரிய முற்றமும் மூன்று கோளக் குவிமாடங்களும் உள்ளன. கோட்டையின் நடுவில் ஒருவித பலிபீடமும் உள்ளது. இந்த நினைவுச்சின்னம் பண்டைய ஒடிசாவின் கட்டிடக்கலையை ஒத்திருக்கிறது.

கோட்டை பற்றி[தொகு]

இந்த கோட்டை ஒடிசா மன்னர் சூர்யவம்சி கஜபதி கபிலேந்திர தேவ் ஆட்சியின் போது 1438–1469 இல் (ஒடியா கல்வெட்டில் எழுதப்பட்டது) கட்டப்பட்டது. இது அவுரங்கசீப்பின் காலத்தில் முகமது தாஹிர் (கல் கல்வெட்டு) என்பவரால் கட்டப்பட்ட கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. ஏ.எஸ்.ஐ.யின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இருந்தபோதிலும், இந்த கோட்டை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. [1] 1568 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் சுல்தானகம் வங்காளத்தின் பீகார் மற்றும் ஒடிசா மீது படையெடுத்தது. இதில் மேற்கு வங்கத்தின் பிரிக்கப்படாத மிட்னாபூர் மாவட்டமும் அடங்கும். பின்னர், 1575 இல் துக்கராய் போரில் வங்காளத்தை ஆட்சி செய்த ஆப்கானியர்களை தோற்கடித்து முகலாயர்கள் ஒடிசாவை ஆக்கிரமித்தனர். அவர்கள் ஒடிசா பகுதியை ஐந்து சர்கார்களாகப் பிரித்தனர். இந்த பகுதி ஜலேசர் சர்க்காரில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் முகலாயர்களால் மத ரீதியான படையெடுப்புகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும், அவுரங்கசீப்பின் ஆட்சியில் இவை அடிக்கடி நிகழ்ந்தன. அவுரங்கசீப்பின் படைகள் மிட்னாபூர் உட்பட ஒடிசாவின் பல கோயில்களைக் கொள்ளையடித்தன. ஜெகந்நாதர் கோயிலை இடிக்க அவுரங்கசீப் ஒரு இஸ்லாமிய சட்டத்தின வெளியிட்டார். அதன்படி குரும்பேரா கோட்டை மற்றும் கோயில் வளாகம் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் தாக்கப்பட்டு மசூதியாக மாற்றப்பட்டன. 1752 ஆம் ஆண்டில், மிட்னாபூர் பகுதி ஒடிசாவிலிருந்து முறையாக பிரிக்கப்பட்டு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது.  

கோட்டையின் உள்கட்டமைப்புகள்[தொகு]

இந்த கோட்டையின் அமைப்பு ஒடிசாவின் இடைக்கால கட்டிடக்கலையை ஒத்திருக்கிறது. அதே நேரத்தில் பிற்கால முகலாய கட்டிடக்கலைகளின் கூறுகளையும் உள்ளடக்கியது. இந்த கோட்டையின் ஒரு மேடையில் மூன்று குவிமாடங்கள் ஒரு பலிபீடத்துடன் உள்ளன. இந்தக் கோட்டையின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதன் கட்டமைப்புகள் இடிந்து கிடந்தாலும், வெளிப்புறத் தூண்களைக் கரைக்க சிமென்ட் மற்றும் சுண்ணாம்பு மோட்டார் ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டமைப்புகள் இடிந்து விழாமல் பாதுகாக்க ஏ.எஸ்.ஐ கணிசமான முயற்சி எடுத்துள்ளது. தூண்கள் ஒரு பூ போன்று வடிவமைக்கப்பட்ட கூரையை தாங்கி நிற்கின்றன. இடது-குவிமாடத்தின் பின்புறம் வட்டத் தூண்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த கோட்டையின் கட்டிடக்கலை ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ரைபானியா கோட்டையுடன் ஒத்திருக்கிறது.  

அதன் பயன்பாடு பற்றிய ஒரு கல்வெட்டு குவிமாடம் கட்டமைப்பிற்கு பின்னால் நேரடியாக அமைக்கப்பட்டுள்ளது.

கட்டடக்கலை பண்புகள்[தொகு]

குரும்பேரா ஒரு கோட்டை என்று அழைக்கப்பட்டாலும், அதில் ஒரு கோட்டையின் அனைத்து அடிப்படை பண்புகளும் இல்லை, அதாவது ஆயுதங்கள் அல்லது துப்பாக்கி தூள் பாதுகாப்பதற்கான சேமிப்பு இடம் ஆகும். ஒரு வலுவான பிரதான நுழைவாயில், அடுக்கு சுவர்கள், கோட்டைகள், அகழிகள், காவற்கோபுரங்கள் அல்லது ரகசிய வெளியேற்றங்கள் போன்ற பொதுவான பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. தற்காப்புக்காக படையினரை மறைப்பதற்கான சாத்தியத்தை இந்த அமைப்பு உடனடியாகக் கொடுக்கவில்லை, ஒரு போர்த்திறம் வாய்ந்த தாக்குதலுக்குத் திட்டமிடுவதற்கான தெளிவான இடத்தையும் இது வழங்கவில்லை.

மாறாக, இந்த அமைப்பு தாழ்மையானதாகவும், பொதுக் கூட்டங்களுக்கு ஏற்றதாகவும் தோன்றுகிறது. இது ஒரு மசூதியை ஒத்திருக்கிறது, அங்கு பலிபீடம் மேற்கு முனையில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது முழு கூட்டமும் ஒரே திசையில் எதிர்கொள்ளக்கூடும். இது இருந்தபோதிலும், அத்தகைய நடைமுறைகள் குறித்து எழுதப்பட்ட சான்றுகள் அல்லது புராணக்கதைகள் எதுவும் இல்லை. குரும்பேரா முதலில் ஒரு மசூதியாக மாற்றப்பட்ட கோட்டையா என்பதைக் கண்டறியும் முன்விசாரணைகள் தேவைப்படும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Kurumbera Fort". 15 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரும்பேரா_கோட்டை&oldid=2881269" இருந்து மீள்விக்கப்பட்டது