குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா

ஆள்கூறுகள்: 11°44′39″N 78°10′15″E / 11.744153°N 78.170944°E / 11.744153; 78.170944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா
Map
11°44′39″N 78°10′15″E / 11.744153°N 78.170944°E / 11.744153; 78.170944
திறக்கப்பட்ட தேதி1971[1]
அமைவிடம்சேலம் தமிழ்நாடு, இந்தியா
நிலப்பரப்பளவு78.40 ஏக்கர்கள் (31.73 ha)[1][2]
விலங்குகளின் எண்ணிக்கை157[3]
உயிரினங்களின் எண்ணிக்கை17
ஆண்டு பார்வையாளர்கள்200,000[4]
உறுப்புத்துவங்கள்முதன்மை வனப் பாதுகாவலர்,[1]
முக்கிய கண்காட்சிகள்குரங்குகள், புள்ளிமான்கள், சாம்பார் மான்கள், நட்சத்திர ஆமை.[2]

குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா (Kurumbapatti Zoological Park) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மிருகக்காட்சி சாலையாகும், சேலத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் சேர்வராயன் மலை அமைந்துள்ளது.. 1981 ஆம் ஆண்டில் ஒரு சிறிய அருங்காட்சியகமாக இப்பூங்கா அமைக்கப்பட்டது, பின்னர் இது 31.73 எக்டேர் அளவுக்கு நீட்டிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. .மிருகக்காட்சி சாலையில் பல வகையான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள குரங்குகள் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாக உள்ளன, மேலும், இவை பாதுகாக்கப்பட்ட காடுகளின் அருகிலேயே உள்ளன, பார்வையாளர்களுக்கு அங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பார்த்து அனுபவிப்பதற்கான ஒரு வசதி வாய்ப்பையும் பூங்கா அனுமதிக்கிறது. இந்த பூங்காவில் மென்மையான நிலப்பரப்பு, மூங்கில் மற்றும் வனப்பகுதி மற்றும் அரை வற்றாத நீரோடைகள் போன்றவை உள்ளன. குழந்தைகள் விளையாட்டு மைதானம் ஒன்றும் இங்குள்ளது. இந்த சிறு பூங்காவானது ஒரு சிறிய வகை மிருகக்காட்சிசாலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது [2][3][5][6] [7] [8] [9][10][11].

கண்காட்சி[தொகு]

குரும்பப்பட்டி விலங்கியல் பூங்காவில் புள்ளி மான், சாம்பார் மான், வெள்ளை மயில், பொன்னட் குரங்கு , சாம்பல் நாரை, சாம்பல்நிற சதுப்புநிலக் கொக்கு, ஆமை, சதுப்பு முதலை, நட்சத்திர ஆமை, பிளம் வகை கிளிகள், 58 வயதான யானை ஆண்டாள், மஞ்சள்-கால் பச்சை புறா, கலைமான், மற்றும் காட்டெருமை நான்கு அலெக்சாண்ட்ரிய கிளிகள், 20 ரோஜா வளையம் கொண்ட கிளிகள் மற்றும் ஐந்து பிளம் தலை கொண்ட கிளிகள் வண்டலூரில் உள்ள அரிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு கண்காட்சி நோக்கத்திற்காக கட்டப்பட்ட அடைப்புகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் சிறப்பாகப் பார்க்க அனுமதிக்க கிளிகள் தனித்தனி உறைவிடங்களில் உள்ளன.

கணக்கெடுப்பு[தொகு]

2018 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் நாள் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இங்குள்ள விலங்குகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நான்கு பாலூட்டி இனங்களில் 34 விலங்குகளும், ஒன்பது பறவைகள் இனத்தில் 109 பறவைகளும், நான்கு ஊர்வன இனத்தில் 14 விலங்குகளும், என மொத்தமாக பதினேழு இனங்களை சேர்ந்த 157 விலங்குகள் அங்கு காணப்பட்டன.

புனரமைப்பு[தொகு]

2019 ஆம் ஆண்டில் ஒரு பட்டாம்பூச்சி தோட்டம் திறக்கப்பட்டது மற்றும் மிருகக்காட்சிசாலையின் உள்ளே உள்ள பாதைகளில் புலிகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் போன்ற விலங்குகளின் முப்பரிமாணக் கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டு பாதையை அழகாக்குகின்றன. குறுக்கு மகரந்தச் சேர்க்கைக்கு வசதியாக நான்கு தேனீக்கள் கொண்ட பட்டாம்பூச்சி தோட்டத்திற்கு அருகிலுள்ள பகுதியில் பரவலான பூச்செடிகள் நடவு செய்து இணைக்கப்பட்டன. புனரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இங்கு ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் புல்வெளிகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டன.

விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு[தொகு]

சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டியில் ஒரு பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் இந்த மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. பூங்கா அமைந்துள்ள நகரமானது மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மிருகக்காட்சிசாலையானது வன விலங்குகளை மீட்பதற்கும் மறுவாழ்வு செய்வதற்கும் வசதியாகவும் தவறாமல் ஈடுபடவும் வாய்ப்ப கிடைக்கிறது. காயமடைந்த விலங்குகளுக்கு மிருகக்காட்சி சாலையில் உரிய கால்நடை பராமரிப்பு வழங்கப்படுகிறது மற்றும் பிற விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு காட்டுக்குள் விடப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Kurumambapatti Zoo Information in central zoo authority of india". பார்க்கப்பட்ட நாள் 3 January 2018.
  2. 2.0 2.1 2.2 "Kurumambapatti Zoo information in tamilnadu forest". பார்க்கப்பட்ட நாள் 6 January 2018.
  3. 3.0 3.1 "Zoo Species info from CZA, Category(Small Zoo), Page(267)" (PDF) (in Indian English). 2018-03-31. ISSN 0971-751X. Archived from the original (PDF) on 2018-08-13. பார்க்கப்பட்ட நாள் 2018-08-13.
  4. "Annual Report 2016-17" (PDF). பார்க்கப்பட்ட நாள் 30 January 2018.
  5. "Battered road keeps visitors away from Salem zoo". தி இந்து. 15 July 2013. http://www.thehindu.com/news/cities/Coimbatore/battered-road-keeps-visitors-away-from-salem-zoo/article4917111.ece. 
  6. "Zoo Bird Info". பார்க்கப்பட்ட நாள் 9 January 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "The only two amusement spots". தி இந்து. 11 August 2015. http://www.thehindu.com/news/national/tamil-nadu/the-only-two-amusement-spots/article7524338.ece. 
  8. "Forest Dept. elephant camps begin". தி இந்து. 12 December 2014. http://www.thehindu.com/news/cities/Coimbatore/forest-dept-elephant-camps-begin/article6685464.ece. 
  9. "Research, training facility comes up at Vandalur zoo". தி இந்து. 13 October 2017. http://www.thehindu.com/news/cities/chennai/research-training-facility-comes-up-at-vandalur-zoo/article19848776.ece. 
  10. "Chilled lassi, sprinklers keep zoo inmates cool". தி இந்து. 16 April 2015. http://www.thehindu.com/news/cities/chennai/chilled-lassi-sprinklers-keep-zoo-inmates-cool/article8518184.ece. 
  11. "Kurumbapatti Zoo". பார்க்கப்பட்ட நாள் 13 June 2019.

புற இணைப்புகள்[தொகு]

https://salem.nic.in/tourist-place/zoos-parks-falls/