உள்ளடக்கத்துக்குச் செல்

குருமாத்தூர் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருமாத்தூர் கல்வெட்டு
செய்பொருள்கருங்கல்
எழுத்துபல்லவ கிரந்தம்
உருவாக்கம்கி.பி.9ஆம் நூற்றாண்டு (24 மே, கி.பி. 871)
தற்போதைய இடம்கேரளம், ஆரீகோட் அருகில் உள்ள குருமாத்தூர் விஷ்ணு கோயில்

குருமாத்தூர் கல்வெட்டு (Kurumathur inscription (கி.பி 9 ஆம் நூற்றாண்டு) என்பது வட கேரளத்தில் பல்லவ கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்ட ஒரு சமசுகிருத கல்வெட்டாகும். இது ஆரியகோடின் தெற்கில் உள்ள குருமாத்தூர் விஷ்ணு கோவிலைப் புதுப்பிக்கும் போது அகழ்வாய்வில் 2011 பெப்ரவரி மாதம், கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டானது ஒரு கருங்கற்பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது.[1][2][நம்பகத்தகுந்த மேற்கோள்?]

அரியக்கோடானது காளியாறின் தென் கரையில், கரிக்கட்டின் வடமேற்கில் அமைந்துள்ளது. இது கேரளாள்பதியில் குறிப்படப்பட்டுள்ள 32 பிராமணக் குடியேற்றங்களில் ஒன்றாகும்.

இந்தக் கல்வெட்டானது பின்வரும் தகவல்களை அளிக்கிறது

  • அளவு: முன்று பத்திகள்
  • ஆட்சியில் இருந்த மன்னரின் பெயர்: "இராம இராஜசேகரன்"
  • நாள்: கி.பி. 871 மே 24
  • உள்ளடக்கம்:
    • "அரசன் இராம இராஜசேகரனின் புகழானது பெருங்கல் முழுவதும் பரவியுள்ளது"
    • "இந்த இராஜசேகர மன்னன் இராமர் பிறந்த புகழ்பெற்ற இசுவாகு மரபில் பிறந்தவர்."[1]
    • "நாட்டை மனு நீதி தவறாமல் ஆட்சிசெய்பவர்"[1]
    • "இவரது நீதியான ஆட்சியில் பிராமணர்களுக்கு 12 கோயில் குளங்களை வெட்டியும் விஷ்ணுவின் சிலையும் நிறுவப்பட்டது"[1][2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 INDIAN ARCHAEOLOGY 2010-2011 – A REVIEW PUBLISHED BY THE DIRECTOR GENERAL ARCHAEOLOGICAL SURVEY OF INDIA. JANPATH, NEW DELHI-110011, 2016
  2. 2.0 2.1 Naha, Abdul Latheef. Ancient inscription throws new light on Chera history. February 11, 2011 தி இந்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருமாத்தூர்_கல்வெட்டு&oldid=2727502" இலிருந்து மீள்விக்கப்பட்டது