குருநானக் தாம் குருத்துவாரா
தோற்றம்
குருத்துவாரா குரு நானக் தாம் (Gurudwara Guru Nanak Dham) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமேசுவரத்தில் உள்ள ஒரு குருத்துவார் ஆகும். முதல் சீக்கிய குருவான குரு நானக், சுமார் 1511 இல் இராமேசுவரத்திற்கு வந்ததன் நினைவாக இந்த குருத்துவாரா கட்டப்பட்டது. இந்த குருத்வாராவை தமிழ்நாடு ஆளுநர், சுர்சித் சிங் பர்னாலா 2005 இல் பார்வையிட்டார். பின்னர் குருத்வாராவை பழுதுபார்ப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உதவி செய்வதாக அதன் பொறுப்பாளர்களுக்கு உறுதியளித்தார்.[1]
அதன் பின்னர் குருத்வாரா விரிவாக்கப்பட்டது. இராமேசுவரத்தில் சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாததால், இது சென்னையில் உள்ள, ஸ்ரீ குருநானக் சத் சங் சபா குருத்வாராவின் நிர்வாகத்தால் பராமரிக்கபடுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gurudwara to be developed". தி இந்து. 2 August 2005 இம் மூலத்தில் இருந்து 29 June 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060629194140/http://www.hindu.com/2005/08/02/stories/2005080205770300.htm.