உள்ளடக்கத்துக்குச் செல்

குருதேவ் சிங் குலார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருதேவ் சிங்
தனித் தகவல்
முழு பெயர்குருதேவ் சிங் குலார்
பிறப்பு(1933-08-12)12 ஆகத்து 1933
சன்சார்பூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு8 பெப்ரவரி 2024(2024-02-08) (அகவை 90)
லீட்சு, இங்கிலாந்து
பதக்க சாதனை
ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்
ஒலிம்பிக்கு விளையாட்டுகள்
நாடு  இந்தியா
தங்கப் பதக்கம் – முதலிடம் 1956 மெல்பேர்ண் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1958 தோக்கியோ அணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1962 ஜகார்த்தா அணி

குருதேவ் சிங் குலார் (Gurdev Singh Kular) (12 ஆகத்து 1933 - 8 பிப்ரவரி 2024) ஓர் இந்திய ஆண் வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். இவர் இந்திய மாநிலமான பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் சன்சார்பூரைச் சேர்ந்தவர். 1956 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய கோல்பந்தாட்ட அணியில் இவர் ஒரு பகுதியாக இருந்தார். 1958 தோக்கியோ மற்றும் 1962 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கோல் பந்தாட்டம் அணியில் உறுப்பினராக இருந்து அதன் பிந்தைய போட்டியில் அணிக்குத் தலைமை தாங்கினார். அதே ஆண்டு போபாலில் நடந்த தேசிய கோல்பந்தாட்டம் வெற்றி முதன்மை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பஞ்சாப் அணியின் அணித்தலைவராக இருந்தார். 1964 ஆம் ஆண்டு, இந்திய அணித்தலைவராக ஆப்கானிஸ்தானுக்கு ஒரு அணி சுற்றுப்பயணத்தை வழிநடத்தினார்.[1]. குலார் சிங் பிப்ரவரி 8, 2024 அன்று இங்கிலாந்தின் லீட்சு நகரில் தனது 90 வது வயதில் இறந்தார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gurdev Singh, Sports-Reference / Olympic Sports. Retrieved 16 February 2019.
  2. "Oldest Olympians". Facebook. Retrieved 3 March 2024.
  3. Bahra, Dil. "Melbourne 1956 Olympic Gold medallist Gurdev Singh Kullar passes away". Field Hockey. Retrieved 3 March 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதேவ்_சிங்_குலார்&oldid=4214984" இலிருந்து மீள்விக்கப்பட்டது