குருதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருதி
இயக்கம்மனு வாரியர்
தயாரிப்புசுப்ரியா மேனன்
கதைஅனிஷ் பல்யால்
இசைஜேக்ஸ் பிஜாய்
நடிப்புபிரித்விராஜ் சுகுமாரன்
ஒளிப்பதிவுஅபிநந்தன் இராமானுஜம்
படத்தொகுப்புஅகிலேஷ் மோகன்
கலையகம்பிரித்விராஜ் புரொடக்சன்ஸ்
விநியோகம்அமேசான் பிரைம் வீடியோ
வெளியீடுஆகத்து 11, 2021 (2021-08-11)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

குருதி (Kuruthi) என்பது ஒரு இந்திய மலையாள மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் அனிஷ் பல்யால் என்பவரால் எழுதப்பட்டு மனு வாரியர் இயக்கியுள்ள திரைப்படம் ஆகும். பிரித்விராஜ் புரொடெக்சன்ஸ் நிறுவனம் மூலம் சுப்ரியா மேனனால் தயாரிக்கப்பட்டது. இதில் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், முரளி கோபி, ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீந்தா, மாமுக்கோயா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்தார். [1] எல்லை மீறிய மனித உறவுகள் எப்படி வெறுப்பு மற்றும் தப்பெண்ணத்தின் சோதனைகளில் இருந்து தப்பிக்கப் போராடுகின்றன என்பதை இத்திரைப்படம் பேசுகிறது. [2]

இத்திரைப்படத்தின் முதன்மை ஒளிப்பதிவு டிசம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை சுமார் ஒரு மாதம் நீடித்தது. குருதி 13 மே 2021 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த படம் 11 ஆகஸ்ட் 2021 அன்று அமேசான் பிரைம் வீடியோ மூலம் வெளியானது.[3]

கதைக்களம்[தொகு]

இரப்பர் வடிக்கும் தொழிலாளி இப்ராஹிம் தனிமையான மலைத்தொடர்களில் வாழ்கிறார். இவர் தனது மகள் மற்றும் மனைவியை இழந்த அதிர்ச்சிகரமான பருவமழை நிலச்சரிவின் நினைவுகளை விட்டுச்செல்ல முயற்சிக்கிறார். ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், காயமடைந்த காவலர் ஒரு கைதியுடன் அவரது வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தார். பழிவாங்கும் ஒரு சக்திவாய்ந்த எதிரி அவர்களை தனது வீட்டிற்குள் பின்தொடரும் போது, இப்ராஹிம் தனது சொந்த நம்பிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் பற்றிய சோதனை கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒருவரின் செயல் வெறுப்பால் தூண்டப்படும் போது அனைத்து எல்லைகளையும் தாண்டிச் செல்கிறது என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என உணர்கிறார். [4] [5]

நடிப்பு[தொகு]

  • லைக்காக பிருத்விராஜ் சுகுமாரன்
  • இப்ராகிம் அல்லது இப்ருவாக ரோஷன் மேத்யூ
  • மூசா காதராக மாமூக்கோயா
  • எஸ்ஐ சத்யனாக முரளி கோபி
  • கரீம் அல்லது கம்மு வாக சைன் டாம் சாக்கோ
  • சுமதி அல்லது சுமாவாக ஸ்ரிந்தா
  • பிரேமனாக மணிகண்டன் ஆர். ஆச்சாரி
  • உமராக நவாஸ் வள்ளிக்குன்னு
  • ரசூலாக நஸ்லேன் கே.கஃபூர்
  • விஷ்ணுவாக சாகர் சூர்யா

தயாரிப்பு[தொகு]

இயக்குனருக்கு மலையாளத்தில் அறிமுகமான முதல் திரைப்படமாக இத்திரைப்படம் உள்ளது. இவர் இந்தி திரைப்படமான காபி புளுமை இயக்கியிருந்தார். இவர் யுத் என்ற தொலைக்காட்சித் தொடரை எழுதியுள்ளார். தொலைக்காட்சி தொடரை எழுதினார் (இவை இரண்டுமே 2014 ஆம் ஆண்டில்). வாரியர் இத்திரைப்படத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார். "இது ஒரு சமூக அரசியல் திகிலூட்டும் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் இது கொஞ்சம் நாடகத்தனம், அதிரடி மற்றும் திகிலூட்டும் கூறுகளைக் கொண்டுள்ளது. இத்திரைப்படத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்திருந்தாலும், மற்ற எல்லா கதாபாத்திரங்களுக்கும் சம அளவு முக்கியத்துவம் உள்ளது". பல விவாதங்களுக்குப் பிறகு, பிருத்விராஜ் மற்றும் அவரது மனைவி சுப்ரியா மேனன் ஆகியோர் இந்த படத்தை தங்கள் பிரித்விராஜ் புரொடக்‌சன்சில் தயாரிக்க முடிவு செய்தனர். [1]

இத்திரைப்படத்தின் முதன்மை ஒளிப்பதிவு 9 டிசம்பர் 2020 அன்று கோட்டயம் மாவட்டம் ஈராட்டுப்பேட்டையில் தொடங்கியது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவாளராக இருந்தார். [6] [7] ஒரு மாதத்திற்கும் குறைவாக நீடித்த ஒரே கால அட்டவணையில் 4 ஜனவரி 2021 அன்று படப்பிடிப்பு நிறைவடைந்தது. [8] [9]

வெளியீடு[தொகு]

குருதி 13 மே 2021 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது [10] ஆனால் கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. [11] திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் 11 ஆகஸ்ட் 2021 அன்று ஓணம் வெளியீடாக வெளியிடப்பட்டது. [3]

வரவேற்பு[தொகு]

பிலிம் கம்பேனியன் பத்திரிக்கையின் விஷால் மேனன் இத்திரைப்படத்தை "வீட்டுக்குள் நுழைந்த திகிலூட்டித் திரைப்படம் மதப் பிரிவினை தொடர்பான சிக்கலான ஆய்வுக்கு இடமளிப்பதோடு தனிமையில் வாழும் இரண்டு இணக்கமான குடும்பங்களின் அமைதியை உடைக்க அது என்ன செய்ய முடியும்? என்ற அளவிற்கும் விரிந்து செல்கிறது" [12] என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Shrijith, Sajin (1 December 2020). "Actor Prithviraj, Roshan Mathew to star in 'Kuruthi'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு.
  2. Kuruthi - Official Trailer | Prithviraj Sukumaran, Roshan Mathew, Murali Gopy | Amazon Prime Video (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-08-04
  3. 3.0 3.1 "This Onam, keep your friends close and frenemies closer! Watch #KuruthiOnPrime, Aug 11. @PrimeVideoIN". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  4. "Kuruthi trailer: Prithviraj promises a nail-biting thriller, watch". The Indian Express (in ஆங்கிலம்). 2021-08-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.
  5. "'Kuruthi' trailer: A power-packed intriguing thriller on its way - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.
  6. "Prithviraj's Kuruthi begins production". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 10 December 2020.
  7. "Prithviraj Sukumaran's 'Kuruthi' goes on floors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 December 2020.
  8. Sukumaran, Prithviraj (4 January 2021). "Kuruthi Pack Up". டுவிட்டர்.
  9. "It's a 'fast' wrap for Prithviraj's 'Kuruthi'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 6 January 2021.
  10. Express News Service (17 April 2021). "Prithviraj-starrer Kuruthi set for release on May 13". https://www.newindianexpress.com/entertainment/malayalam/2021/apr/17/prithviraj-starrer-kuruthi-set-for-release-on-may-13-2290868.html. 
  11. Ashley, James (13 May 2021). "Kuruthi: Prithviraj Sukumaran's Movie will not Release on OTT platform". The Bulletin Time. பார்க்கப்பட்ட நாள் 15 May 2021.
  12. Menon, Vishal. "Review Of Kuruthi, On Amazon Prime Video: An Engaging Genre-Bender That Works Well On Two Counts". பார்க்கப்பட்ட நாள் August 12, 2021. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதி_(திரைப்படம்)&oldid=3841069" இலிருந்து மீள்விக்கப்பட்டது