குருதி ஊட்டக்குறை
குருதி ஊட்டக்குறை | |
---|---|
ஒத்தசொற்கள் | இஸ்கிமியா |
கால்விரல்களில் ஊட்டக்குறையுள்ள இரத்தநாளம் காரணமாக நீலம் பூரித்திருத்தல் | |
பலுக்கல் | |
சிறப்பு | நாளஞ்சார் அறுவை சிகிச்சை |
குருதி ஊட்டக்குறை (Ischemia அல்லது ischaemia, இசுகிமியா) இழையங்களுக்கு குருதி கொண்டு செல்லப்படுவது தடைபடுவதால் இழையங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான ஆக்சிசன், குளுக்கோசு குறைபாடு ஏற்படுவதைக் குறிக்கிறது.[3] குருதி ஊட்டக்குறை பொதுவாக குருதிக்குழல்களில் ஏற்படும் கோளாறுகளால் உருவாகின்றது; இதனால் தொடர்புடைய இழையங்கள் சேதமடையவும் செயற்திறனை இழக்கவும் காரணமாகிறது. தாழாக்சியம், நுண் குருதிக்குழல் செயற்பிழற்சி போன்றவை ஏற்படுகின்றன.[4][5] நீர்மக்குழல் மேல்மறைப்பு (சுருக்கம்), நாளச் சுருக்கம், குழலியக்குருதியுறைமை, குருதிக் குழாய்க்கட்டி அடைப்பு போன்றவையால் உடலின் ஒரு அங்கத்தில் மட்டும் சிலநேரங்களில் உள்ளக தாழாக்சியம் ஏற்படலாம். குருதி ஊட்டக்குறைபாட்டில் ஆக்சிசன் குறைவைத் தவிர பிற ஊட்டக்கூறுகளும் குறைவாக இருக்கும்; வளர்சிதை மாற்றக் கழிவுகளும் வெளியேற்றப் படாதிருக்கும். குருதி ஊட்டக்குறை பகுதியாகவோ (மோசமான உட்செலுத்துகை) முழுமையாகவோ இருக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி 2வது பதிப்பு, 1989.
- ↑ மெர்ரியம்-வெப்சுடர் இணைய அகராதியில் உள்ளடக்கம் "இசுகிமியா" .
- ↑ Merck & Co. Occlusive Peripheral Arterial Disease, The Merck Manual Home Health Handbook website, revised and updated March 2010. Retrieved March 4, 2012.
- ↑ Zhai Y, Petrowsky H, Hong JC, et al: Ischaemia-reperfusion injury in liver transplantation—From bench to bedside. Nat Rev Gastroenterol Hepatol 2013; 10:79–89
- ↑ Perico N, Cattaneo D, Sayegh MH, et al: Delayed graft function in kidney transplantation. Lancet 2004; 364:1814–1827