உள்ளடக்கத்துக்குச் செல்

குருதிக் குழாய்க்கட்டி அடைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருதிக் குழாய்க்கட்டி அடைப்பு
எம்பாலிசம்
சிறுநீரகத் தமனியில் எம்பாலிக் பொருள் இருப்பதைக் காட்டும் நுண்வரைவிப் படம். சிறுநீரகப் புற்றுநோய் காரணமாக இந்த சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. H&E கறை.
சிறப்புஇரத்தநாள அறுவை சிகிச்சை

குருதிக் குழாய்க்கட்டி அடைப்பு (embolism, எம்பாலிசம்) என்பது அடைப்பு ஏற்படுத்தும் பொருளான எம்போலஸ், குருதிக் குழாயின் உள்ளே இருப்பதாகும்.[1] இந்த எம்போலசு என்பது குருதி உறைந்து ஏற்பட்டிருக்கலாம் (குருதி உறைகட்டி), கொழுப்பின் சிறுகோளமாக இருக்கலாம் (கொழுப்பு உறைகட்டி), காற்றுக் குமிழாக அல்லது வேறு வளிமமாக இருக்கலாம், பனிக்குட நீர்க்குமிழ் அல்லது வேற்றுப் பொருளாக இருக்கலாம். இத்தகைய தடை குருதிக்குழலில் இரத்த ஓட்டத்தை முழுவதுமாகவோ பகுதியாகவோ தடுக்கலாம்.[2] இத்தகைய அடைப்பு (நீர்மக்குழல் அடைப்பு) எம்போலசு ஏற்பட்டவிடத்திலிருந்து தொலைவில் உள்ள உடல் அங்கத்தைப் பாதிக்கலாம். குருதி உறைக்கட்டியால் ஏற்படும் குருதிக்குழாய்க் கட்டி அடைப்பு திராம்போஎம்பாலிசம் (குருதி உறைகட்டி அடைப்பு) எனப்படும்.

எம்பாலிசம் வழமையாக ஓர் நோய்க்குரிய நிகழ்வு. அதாவது ஏதேனும் நோய் அல்லது காயத்துடன் நிகழ்வது. சிலநேரங்களில் சிகிச்சையின் அங்கமாக வேண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கப்படலாம். காட்டுகளாக குருதிப்போக்கை நிறுத்திட, புற்றுள்ள நோய்க்கட்டிக்கு குருதி செல்வதைத் தடுத்து அதனை அழித்திட எம்போலசு செலுத்தப்படலாம். இத்தகைய சிகிச்சை முறை குழாய்க்கட்டியாக்கம் (எம்பாலிசேசன்) எனப்படுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dorland's (2012). Dowland's Illustrated Medical Dictionary (32nd ed.). Elsevier. p. 606. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4160-6257-8.
  2. Britannica Concise Encyclopedia 2007