குருதிக்குழாய்ச் சீரமைப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குருதிக்குழாய்ச் சீரமைப்பு | |
---|---|
![]() பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி | |
அ.நோ.வ-9-ம.மா | 00.6, 36.0 39.50 |
பாடத் தலைப்பு | D017130 |
LOINC: | 36760-7 |
ஆஞ்சியோபிளாஸ்டி (அல்லது பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி) (Angioplasty )என்பது ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய நாளத்தின் ஊடாக (நாளத்தின் உட்புறம்) செய்யப்படும் ஓர் அறுவை சிகிச்சையாகும்.
பயன்கள்[தொகு]
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை இதய தமனி(கொரோனரி), மூளை தமனி (கரோடிட்), சிறுநீரக தமனி (ரீனல்), பிற தமனிகள் மற்றும் சிரைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
செய்முறை[தொகு]
தொடை அல்லது மணிக்கட்டு தமனி வாயிலாக ரத்த குழாய்கள் அணுகப்படுகின்றன. சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டிய நாளத்தில் 2 முதல் 2.5 மிமீ விட்டமுள்ள குழாய் நிலைநிறுத்தப்படுகிறது.அதன் வாயிலாக 0.௦14" விட்டமுடைய நுட்பமான ஒயர் அடைப்பை தாண்டி நிலைநிறுத்தப்படுகிறது. இந்த ஒயரின் மேலாக பலூன் ஒன்று செலுத்தப்பட்டு அடைப்பின் ஊடே விரிவடைக்கப்படுகிறது. தேவையிருப்பின் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு அடைப்பு முற்றிலும் நீக்கப்படுகிறது.
குறிப்பு[தொகு]
ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்தப்பட்ட நோயாளிகள் குறித்த காலத்திற்கு ஆஸ்பிரின் மற்றும் குலோபிடோக்ரேல் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது முற்றிலும் அவசியம்.