உள்ளடக்கத்துக்குச் செல்

குருணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடது, உடைந்த அல்லது மாலி அரிசி; வலது, நீண்ட அரிசி. முந்தையது செனகலில் பிரபலமானது, இங்கு இது ரவையுடன் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

குருணை அல்லது நொய்யரிசி (Broken rice) என்பது பொதுவாக நெல்லில் இருந்து தவிட்டை நீக்கும் போது உடைபடும் அரிசிகளாகும் ஆகும்.[1] குருணைகளை முழுத் அரிசியிலிருந்து பிரித்து அளவு வாரியாக பிரிக்க இயந்திரப் பிரிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.

குருணை அரிசி துண்டுத் துண்டாக இருக்கும். இதனைக் குறைபாடுள்ளதாகக் கருதப்படுவதில்லை. மேலும் அழகியல் தவிர, இது முழு அரிசிக்குச் சமம்.[2] இது முழு அரிசிக்கு இணையான அளவு சத்தானது (அதாவது அனைத்துத் தவிடும் இருந்தால், பழுப்பு அரிசியைப் போலச் சத்தானது; எதுவும் இல்லை என்றால், வெள்ளை அரிசியைப் போலச் சத்தானது).

குருணை அரிசி பயன்பாட்டிற்கு நீண்ட வரலாறு உண்டு. இப்னு பதூதா 1350ஆம் ஆண்டில் மாலி பகுதியில் அரிசி மாச்சேவை (இரவை) பற்றிக் குறிப்பிடுகிறார்.[3] இது ஆப்பிரிக்க அரிசியால் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.

அரைத்தல்

[தொகு]

அரிசி உமி நீக்கும் இயந்திரத்திலிருந்து கிடைக்கும் குருணை அரிசி பழுப்பு நிற முழு தானியமாக இருக்கும். மாவு அரவை இயந்திரத்திலிருந்து கிடைக்கும் குருணை அரிசி வெண்மையாக இருக்கலாம்.

அரைக்கும் போது, ஆசிய அரிசி அல்லது நெல் அரிசி என்று பொதுவாக அழைக்கப்படும் ஒரைசா சட்டைவா, சுமார் 50% முழு அரிசியையும், பின்னர் தோராயமாக 16% குருணை அரிசி, 20% உமி, 14% தவிடு என உற்பத்தி செய்யப்படுகிறது. ஆப்பிரிக்க அரிசி, ஒரைசா கிளாபெரிமா, அதிக உடையக்கூடிய தானியங்களைக் கொண்டுள்ளது.

மனித நுகர்வு

[தொகு]
வெங்காயம், மிளகாய், இஞ்சி சேர்த்து சமைத்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறப்படும் குருணை அரிசி உப்புமா உணவு, இந்தியாவிலிருந்து .
வியட்நாமில் எலுமிச்சைப் புல் பன்றி இறைச்சியுடன் கூடிய காம் தாம் (அதாவது "குருணை அரிசி").
மூரித்தானியாவில், தீபூடியன், தக்காளி உடைத்த அரிசி, மீன், காய்கறிகளுடன் கூடிய உணவு

தானியங்களின் வெவ்வேறு அளவு, வடிவம் காரணமாக, குருணை அரிசி "முழு" அரிசியிலிருந்து வேறுபட்ட, மென்மையான அமைப்பைக் கொண்டுள்ளது.[4] மேலும் சுவைகளை மிக எளிதாக உறிஞ்சுகிறது. குருணை அரிசியினைச் சமைக்கக் குறைந்த எரிபொருளே பயன்படுத்தப் படுகிறது. விரைவாகச் சமைக்கப்படுகிறது. மேலும் நீண்ட சமையல் நேரம் தேவைப்படும் அரிசிக் கஞ்சிகளை எளிதாகத் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

குருணை அரிசிகள் பெரும்பாலும் குறைந்த விலை கொண்டவை.[5][6] எனவே ஏழை நுகர்வோர் இவற்றை விரும்புகிறார்கள். ஆனால் இவை விருப்பப்படியும் உண்ணப்படுகின்றன. சில சமையல் புத்தகங்களில் விரும்பிய அமைப்பை அல்லது வேகமான சமைக்க முழு அரிசியிலிருந்து எவ்வாறு உடைந்த அரிசி தயாரிப்பது என்பதை விவரிக்கின்றன.

மேற்கு ஆப்பிரிக்கா (பாரம்பரிய ஆப்பிரிக்க அரிசியை உடைப்பது எளிது), தாய்லாந்து, வங்கதேசம், தென்கிழக்கு ஆசியாவின் பிற இடங்களில் உள்ளூர் உணவு வகைகளின் ஒரு பகுதியாக குருணை அரிசி உட்கொள்ளப்படுகிறது. வியட்நாமில், காம்தாம் (அதாவது "உடைந்த அரிசி") என்பது பன்றி இறைச்சியுடன் கூடிய ஒரு பிரபலமான அரிசி உணவாகும். மேற்கு ஆப்பிரிக்காவில் தீபௌடியன் என்பது பெரும்பாலும் உடைந்த அரிசியால் தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான உணவாகும். தென் கரோலினாவில் உடைந்த அரிசி அரிசி கிரிஸ்ட் அல்லது மிட்டிலின்சு என்று அழைக்கப்படுகிறது. வங்காளதேசத்தில் இது கூத் என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக வறுத்த மிளகுத்தூள், பூண்டு, கடுகு எண்ணெய்யுடன் சேர்த்து, தனியாகவோ அல்லது ஒரு துணை உணவுடனோ சாப்பிடப்படுகிறது. பொதுவாக முந்தைய இரவின் எஞ்சிய உணவுடன் உண்ணப்படும்.

தொழில்துறை பயன்பாடுகள்

[தொகு]

மிகச் சிறியதாக உடைந்த அரிசி, மதுபான உற்பத்தியாளர்களின் அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் மதுபான உற்பத்தியாளர்கள் பாரம்பரியமாக இதைப் பயன்படுத்துகின்றனர்.[1][2][7] இருப்பினும் இது மற்ற பயனர்களுக்கும் விற்கப்படுகிறது. உதாரணமாக, குருணை அரிசியைச் செல்லப்பிராணி உணவுத் துறையிலும், கால்நடைத் தீவனம் மற்றும் மீன்வளர்ப்பிலும் பயன்படுத்தலாம். நொறுக்கப்பட்ட அரிசி மாப்பொருள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது சலவை மாப்பொருளாகவும் உணவுகள், அழகுசாதனப் பொருட்கள், ஜவுளி உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "SAGE V FOODS, LLC. Types of rice". Archived from the original on 21 March 2013. Retrieved 8 June 2018.
  2. 2.0 2.1 "USDA ARS Online Magazine Vol. 50, No. 5". www.ars.usda.gov. Retrieved 8 June 2018.
  3. El-Namaky, R. A.; Demont, M. (2013), Hybrid rice in Africa: challenges and prospects, CABI, pp. 173–178, doi:10.1079/9781845938123.0173, ISBN 978-1-84593-812-3
  4. Saleh, Mohammed; Meullenet, Jean-Francois (May 2013). "Broken rice kernels and the kinetics of rice hydration and texture during cooking.". J Sci Food Agric 93 (7): 1673–9. doi:10.1002/jsfa.5948. பப்மெட்:23174947. Bibcode: 2013JSFA...93.1673S. 
  5. "fsa.usda.gov Loan Values for 2007 Crop Whole Kernels and Broken Rice" (PDF). Retrieved 8 June 2018.
  6. "fas.usda.gov USDA trade report" (PDF). Archived from the original (PDF) on 24 February 2012. Retrieved 8 June 2018.
  7. ""Life as a Grain of Rice", USDA Ag. Research Service". Archived from the original on 20 December 2013. Retrieved 8 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருணை&oldid=4206959" இலிருந்து மீள்விக்கப்பட்டது