குருடிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குருடிமலை (kurudimalai) என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைத் தொடர் ஆகும்.[1] இந்த மலையின் பெயர் குருவரிஷி மலை என்றும் காலப்போக்கில் குருடிமலை என்று மருவிவிட்டதாக கூறப்படுகின்றது.

குருடிமலையானது கோயம்புத்தூருக்கு மேற்கே அமைந்துள்ளது. மலை நடை மேற்கொள்பவர்கள் காலையில் ஏறி இருட்டுடவதற்குள் இறங்கிவிடக்கூடியதாக இந்த மலை உள்ளது. மலையில் அமைந்துள்ள மேல்முடி என்ற உயர்ந்த இடத்தில் ஒரு சிறிய அரங்கநாதர் கோயில் உள்ளது. இந்த மலையில் உள்ள உயர்ந்த சிகரத்துக்கு பிரித்தானிய நில அளவையளாரான வில்லியம் லாம்டன் நினைவாக லாம்ப்டன் சிகரம் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த மலைத்தொடரனாது லாம்டன் மலைத் தொடர் என்ற பெயரால் குறிக்கப்பட்டது. இந்த மலையில் இருந்து கோயம்புத்தூர் நகரை பார்க்க இயலும். இந்த மலையில் ஒரு காலத்தில் தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டன. இங்கு தேயிலைப் பயிரானது செழித்து வளரவில்லை என்ற காரணத்தால் இந்த தேயிலைத் தோட்டங்கள் கைவிடப்பட்டன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. சு. தியடோர் பாஸ்கரன் (2019 செப்டம்பர் 14). "குருடிமலையும் எவரெஸ்ட்டும்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 15 செப்டம்பர் 2019.
  2. மேகன் (2018 ஏப்ரல் 2). "வியப்பை ஏற்படுத்திய பாலமலைப் பயணம்". கட்டுரை. நம்ம கோயமுத்தூர். பார்த்த நாள் 15 செப்டம்பர் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருடிமலை&oldid=2991907" இருந்து மீள்விக்கப்பட்டது