குருக்கத்தி கட்கபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குருக்கத்தி கட்கபுரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் கீவளூருக்கு அடுத்து 2 கிமீ தொலைவில் உள்ளது. ஒரு காலத்தில் இப்பகுதி குருக்கத்தி வனமாக அமைந்திருந்ததால் இவ்வூர் குருக்கத்தி என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூர் கத்தி என்ற பெயரே குருக்கத்தி என்று மாறியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.இக்கோயிலின் தல மரம் குருக்கத்தி ஆகும். [1]

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் கத்தீசுவரர் என்றும் கட்கபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ஞானாம்பிகை. [1]

குளம்[தொகு]

இக்கோயிலின் குளம் கொல்லாநதி என்றழைக்கப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014