குருகுமார் பாலச்சந்திர பருல்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குருகுமார் பாலச்சந்திர பருல்கர்
G. B. Parulkar
பிறப்புதிசம்பர் 1, 1931 (1931-12-01) (அகவை 89)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிஇருதய அறுவை சிகிச்சை நிபுணர்
அறியப்படுவதுஇருதய அறுவை சிகிச்சை
விருதுகள்

குருகுமார் பாலச்சந்திர பருல்கர் (Gurukumar Balachandra Parulkar) ஒர் இந்திய இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை மற்றும் சேத் கோர்தண்டாசு சுந்தர்தாசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். 1984 ஆம் ஆண்டு இந்திய அறுவைசிகிச்சை சங்கத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றினார் [1] கு.பா. பருல்கர் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார்.

இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரம் மும்பையில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் நாள் இவர் பிறந்தார் [2], இந்தியாவில் இருதய அறுவை சிகிச்சையின் முன்னோடியாகத் திகழ்ந்த பிரபுல்லா குமார் செனினுடன் இணைந்து பருல்கர் பணியாற்றினார் [3]. மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்திலுள்ள பேலோர் மருத்துவக் கல்லூரியில் மேம்பட்ட பயிற்சியைப் பெற்றார். இந்தியாவுக்குத் திரும்பியதும், இந்தியாவில் விரிவடைந்த பெருந்தமனி நீக்கத்திற்கான தாழ்வெப்பநிலை இரத்த ஓட்டத்தடுப்பு நுட்பத்தை அறிமுகப்படுத்தினார்[4]. 37 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்த செவிலி அருணா சான்பாக் வழக்கில் பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் இவரும் ஒருவராவார்[5][6].

இந்தியாவில் மருத்துவ பிரிவுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பிதான் சந்திரா ராய் விருதை இந்திய மருத்துவக் கழகம் 1997 ஆம் ஆண்டு குருகுமார் பாலச்சந்திர பருல்கருக்கு வழங்கியது[7]. 1998 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு மிக உயர்ந்த மூன்றாவது குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை வழங்கி சிறப்பித்தது[8]. மேலும் இவர் மகாராட்டிர சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் வழங்கும் 2009 ஆம் ஆண்டுக்கான மராத்தான் ஆசிரியர் விருது[9] மற்றும் இதுபோன்ற பல கௌரவங்களையும் பருல்கர் பெற்றார்[2].

மேற்கோள்கள்[தொகு]